உலகில் உள்ள மீனினங்களில் விஷத் தன்மை கொண்ட மீன் வகைகள் பல உள்ளன. இதில் மிக கொடிய விஷத்தன்மை கொண்ட, பேத்தை என்று அழைக்கப்படும் (Puffer fish) "புப்பர் பிஷ்" நம் இந்தியாவிலும் அதிகம் காணப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
பாதிப்பு
இதன் நஞ்சு முதலில் மனிதனின் உடலில் உதடுகள் மற்றும் நகங்களில் தனது பாதிப்பைக் காட்டும். கொஞ்சம் கொஞ்சமாக உதடுகள் மற்றும் நகங்கள் மரத்துப்போகும். உடல் தனது கட்டுப்பாட்டை இழந்து சுவாசம் விடுவதை சிரமமாக்கி மரணத்தை உண்டாக்குகிறது.
"புப்பர் பிஷ்" பற்றிய அறிய தகவல்
இது ஒரு வகை வினோதமான கடல் மீனாகும். பேத்தை, பேத்தா, தவளை மீன், முள்ளம்பன்றி மீன், பலாச்சி என பல்வேறு வினோதமான பெயர்கள் கொண்டவை. இதை ஆங்கிலத்தில் (Puffer fish) "புப்பர் பிஷ்" என்பர்.
பேத்தை மீன்களின் அமைப்பு மனித முகம் போல் அமைந்திருக்கும். இது ராமேஸ்வரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது அதிக நச்சுத் தன்மைக் கொண்ட மீன் இனங்களில் இதுவும் ஒன்று. இம்மீன் வகைகளில் மொத்தம் 120 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல வண்ணங்களில், வித்தியாசமான உடலமைப்புடன் காணப்படுகிறது.
ஜப்பானில் இது "ஃபுகு" (Fugu) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள இம்மீனானது தன் உடலை 10 மடங்கு பெரிதாக்கிக் கொள்ளும்.
இந்த ஃபுகு மீனானது உலகில் முதுகெலும்புள்ள கொடிய வகை உயிரினங்களில் 2 வது இடத்தில் உள்ளது. தன் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் நச்சுத்தன்மையை முழுவதுமாக அடக்கியுள்ளது. இதன் உடலின் மேற்பரப்பில் முட்கள் சூழ்ந்திருக்கும், மற்றும் தலை பகுதியில் அதிகளவில் நச்சுத்தன்மை உள்ளது.
இது தனது உடலில் (tetrodotoxin) டெட்ரோடோடோக்ஸின் என்ற நஞ்சை உருவாக்குகிறது. இதன் நஞ்சானது ஒரே நேரத்தில் 30 பேரைக் கொள்ளக்கூடியது. சைனைடை விட 1000 மடங்கு விஷம் இதன் உடலில் உள்ளது. மேலும் இதன் நஞ்சை முறியடிக்க இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப் படவில்லை.
இவ்வளவு நச்சுத்தண்மை கொண்ட இந்த பேத்தை மீனானது ஜப்பானில் அதிக விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் இந்த ஃபுகு மீன் ஜப்பானில் $20 வரை விலை போகிறது மற்றும் அந்நாட்டில் ஆண்டிற்கு 10 ஆயிரம் டன் வரை உண்ணப் படுகிறது. இம்மீன் மூலம் தயாரிக்கப்படும் ஓர் உணவின் விலை 14 ஆயிரம்.
ஜப்பானில் இந்த மீனை சமைக்க தனி படிப்பு உண்டு. அதில் இரண்டு ஆண்டுகள் சிறப்பு பயிற்சியும், சான்றிதழும் முறையாக பெற்றவர்கள் மட்டுமே ஃபுகு மீனை சமைக்க முடியும். சமைத்தவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதுவே அவர்களுக்கு கடைசி உணவாகும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments