நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், இந்த தொழில் உங்களுக்கு அதிக லாபத்தை அளிக்கும். இதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை மற்றும் லாபமும் அதிகமாக இருக்கும். இந்தத் தொழிலுக்கு அரசாங்கத்திடமிருந்து மானியமும் கிடைக்கும்.
சொந்த தொழில்
கொரோனாக்குப் பின் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் பலர் வேலை இழந்துள்ளனர். அதனால் சுய தொழிலில் கவனம் செலுத்துகிறார்கள். எனவே நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், இந்த தொழில் உங்களுக்கு அதிக லாபத்தை அளிக்கும். இதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை மற்றும் லாபமும் அதிகமாக இருக்கும். இந்தத் தொழிலுக்கு அரசாங்கத்திடமிருந்து மானியமும் கிடைக்கும்.
மேலும் படிக்க: Mutton Biryani: சுடச்சுட சுவையான மட்டன் கோலி பிரியாணி செய்முறை!
என்ன தொழில் செய்யலாம்?
ஆடு வளர்ப்பு மிகவும் லாபகரமான தொழில். இதில் மிகக் குறைந்த முதலீட்டில் பெரிய வருமானத்தைப் பெறலாம். இதைத் தொடங்க அதிக செலவு இல்லை. கிராமப்புறங்களில் உள்ள ஏராளமானோர் ஆடு வளர்ப்பு தொழிலில் பெரும் தொகையை சம்பாதித்து வருகின்றனர்.
எப்படி தொடங்குவது?
உங்கள் வீட்டிலிருந்தே இந்தத் தொழிலைத் தொடங்கலாம். கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு ஆடு வளர்ப்பு மற்றும் விவசாயம். இன்று ஆடு வளர்ப்பு தொழிலை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்கள் ஏராளம். ஆடு வளர்ப்பில் வருமானம் மற்றும் பால் மற்றும் உரம் போன்ற பல நன்மைகள் உள்ளன.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
இந்தத் தொழிலைத் தொடங்க அதிக முதலீடு தேவையில்லை. அரசு உங்களுக்கு உதவும். கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்பு மற்றும் சுயதொழில் ஆகியவற்றை ஊக்குவிக்க கால்நடை உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இது தவிர மாநில அரசுகளும் மானியம் வழங்குகிறது. இதேபோல், வங்கியில் கடன் பெறலாம். ஆடு வளர்ப்புக்கு நபார்டு வங்கி கடன் வழங்குகிறது.
எவ்வளவு லாபம் ஈட்ட முடியும்?
ஆடு வளர்ப்பு தொழில் மிகவும் லாபகரமானது. நீங்கள் லாபம் ஈட்ட பல வழிகள் உள்ளன. சராசரி வருமானம் ரூ. 18 பெண் ஆடுகள் மூலம் 2,16,000 சம்பாதிக்கலாம். அதே சமயம் ஆண் ஆடுகள் சராசரியாக ரூ. 1,98,000 வருமானமும் அதை தொடரந்து வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.
மேலும் படிக்க
Share your comments