10,000 women employed
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய பாணியை ஓலா நிறுவனம் கையாளத் தொடங்கியுள்ளது.
பெண்களுக்கு வேலை
பெண்களால் ஆன ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பை, ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார். அதில், 'ஓலாவின் ப்யூச்சர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும். அங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தற்சார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு பெண்கள் தேவை. ஓலா ப்யூச்சர் தொழிற்சாலை, முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
இது முழுவதும் பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையைஞச மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையையேச மேம்படுத்தும்' எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments