1. Blogs

நிதிப்பிரச்னையா? உங்களுக்கு உடனடிக் கடன் கிடைக்கும் சிறந்த முதலீட்டுத் திட்டம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The best investment plan to get instant credit!

தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தில், ஆர்டி கணக்கில், நீங்கள் 12 தவணைகள் டெபாசிட் செய்திருந்தால் போதும், உங்களுக்கு உடனடிக் கடன் கிடைக்கும்.

முதலீடு (Investment)

எந்த ஒருத் திட்டதிலும், முதலீடு செய்வதற்கு முன்பு பலமுறை யோசித்துப் பார்ப்பதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆலோசிப்பதும் மிக மிக முக்கியமான ஒன்று.அதேபோல், முதலீடு செய்யும் திட்டம் குறித்து தெளிவான விளக்கத்தைப் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

அந்த வகையில், நல்ல லாபத்தை நோக்கி முதலீடு செய்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் பெஸட் தேர்வாக உள்ளது. ஏனெனில், அவசரத்தேவைக்கு கடனும் பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)

அதிலும் குறிப்பாக கொரோனா, ஊரடங்கு என்பதால் பலருடைய மாத வருமானம் தடைப்பட்டுள்ளது. அவசர மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படும்போது தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டமான ஆர்டி மீது கடன் வாங்கிக் கொள்ள முடிகிறது. உடனடியாக பணம் கிடைப்பதுடன் வட்டியும் குறைவு. நிறைய போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்கள், தங்கள்  வாடிக்கையாளர்களுக்கு கடனும் வழங்குகிறது. அவற்றின் பட்டியல் இதோ. 

ரெக்கரிங் டெபாசிட் (Recurring Deposit)

  • ஆர்டி கணக்கு இருந்தால் 12 தவணைகள் டெபாசிட் செய்யப்பட்டு ஒரு வருடம் கணக்கை தொடர்ந்த பிறகு, நிலுவைக் கடனில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம்.

  • அவ்வாறு வாங்கியக் கடனை ஒரேத் தொகையாக அல்லது சமமான மாதத் தவணைகளிலோ திருப்பிச் செலுத்தலாம்.

  • ஆர்.டி கணக்கிற்கு பொருந்தும் ஆர்.டி வட்டி விகிதத்துடன் கூடுதலாக கடனுக்கான வட்டி 2 சதவீதமாக பொருந்தும்.

  • திரும்பப் பெறும் தேதி முதல் திருப்பிச் செலுத்தும் தேதி வரை வட்டி கணக்கிடப்படும்.

  • கணக்கு முதிர்வடையும் வரை கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கடன் மற்றும் வட்டி ஆகியவை RD கணக்கின் முதிர்வு மதிப்பிலிருந்து கழிக்கப்படும்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

தபால் நிலையத்தின் 15 ஆண்டு பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் முதலீடு செய்திருந்தால், ஆரம்ப ஆண்டு சந்தா செலுத்தப்பட்ட நிதியாண்டின் முடிவில் இருந்து ஒரு வருடம் காலாவதியான பிறகேக் கடன் பெறலாம்.

2-வது கடன் (2nd loan)

ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் பெற முடியும். முதல் கடன் திருப்பிச் செலுத்தப்படாத வரை 2-வது கடன் வழங்கப்படாது.
வாங்கியக் கடனை 36 மாதத்திற்குள் திருப்பிச் செலுத்தினால், ஆண்டுக்கு 1 சதவீத கடன் வட்டி விகிதம் பொருந்தும். இருப்பினும், 36 மாதத்திற்குப் பிறகு கடனை திருப்பிச் செலுத்தினால், கடன் வழங்கப்படும் நாளிலிருந்து ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதம் பொருந்தும்.

மேலும் படிக்க...

தினமும் ரூ.74 சேமிக்கும் அருமையானத்திட்டம்

ரூ.7,000 கல்வி உதவித்தொகை -விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

English Summary: The best investment plan to get instant credit! Published on: 15 September 2021, 07:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.