சீனியர் சிட்டிசன்களை பொறுத்தவரை பணத்தை கவனமாக கையாள வேண்டியது அவசியம். முடிந்தவரை ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடுகளிலேயே சீனியர் சிட்டிசன்கள் பணத்தை போடுகின்றனர். இதுமட்டுமல்லாமல், வரியை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதையும் சீனியர் சிட்டிசன்கள் திட்டமிட வேண்டும். சீனியர் சிட்டிசன்களுக்கு நிறைய வருமான வரி சலுகைகளை வருமான வரிச் சட்டம் வழங்குகிறது. ஆக, சீனியர் சிட்டிசன்கள் வருமான வரியை சேமிக்க உதவும் சில முதலீடுகளை பற்றி பார்க்கலாம்.
வரி இல்லா பத்திரங்கள் (Tax free bonds)
நல்ல வருமானமும் வேண்டும், அதே நேரம் வருமான வரி சலுகையும் வேண்டும் என்னும் சீனியர் சிட்டிசன்களுக்கு வரி இல்லா அரசு பத்திரங்கள் (Tax free bonds) நல்ல சாய்ஸ். இந்த பத்திரங்கள் எந்த ரிஸ்க்கும் இல்லாத பாதுகாப்பான முதலீடு. அதிக வரி செலுத்துவோர் தங்கள் வரியை சேமிப்பதற்கும் இந்த பத்திரங்கள் உதவும்.
5 ஆண்டு வரி சேமிப்பு ஃபிக்சட் டெபாசிட் (5 year Tax Saving FD)
ஐந்து ஆண்டு வரி சேமிப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களின் (5 year Tax Saving FD) மூலம் சீனியர் சிட்டிசன்கள் வருமான வரியை சேமிக்க முடியும். எனினும், இத்திட்டங்களில் பணத்தை முதலீடு செய்துவிட்டால் 5 ஆண்டுகளுக்கு வெளியே எடுக்க முடியாது.
சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme)
சிறு சேமிப்பு திட்டமான சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizen Savings Scheme) ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு, நல்ல வட்டி வருமானம் மட்டுமல்லாமல் வருமான வரியும் சேமிக்க முடியும். தற்போது சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.
தேசிய பென்சன் திட்டம் (National Pension System)
தேசிய பென்சன் திட்டத்தில் (National Pension System) முதலீடு செய்தால் வருமான வரிச் சட்டம் பிரிவுகள் 80CCD (1) மற்றும் 80CCD (1B) ஆகியவற்றின் கீழ் வருமான வரியை சேமிக்க முடியும்.
மேலும் படிக்க
ஆன்லைன் விளையாட்டை எதிர்ப்பவரா நீங்கள்: தடை செய்ய கருத்து சொல்லுங்கள்!
200 ரூபாய் முதலீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் பென்சன் திட்டம்!
Share your comments