கரூரில் சென்ற வாரம் சர்வதேச முருங்கை கண்காட்சி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது. அரசு முருங்கையின் மண்டலமாக ஏழு மாவட்டங்களை அறிவித்ததை அடுத்து இவ்விழா கரூரில் கொண்டாடப்பட்டது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
இக்கண்காட்சியில், முருங்கையில் பல்வேறு ரகங்கள் மற்றும் பயிர் மேம்பாட்டு முறைகள், முருங்கைக்காய், இலை, விதை உற்பத்தி மற்றும் பருவமில்லா காலங்களில் உற்பத்தி பெறும் முறைகள், அறுவடைக்கு பிந்தய தொழில்நுட்பங்கள், அங்ககச் சான்றளிப்பு மற்றும் மதிப்புக் கூட்டுதல் மற்றும் முருங்கை ஏற்றுமதியாளர்கள், வணிகர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் விவசாயிகள் சந்திப்பு ஆகியன நிகழ்த்தப்பட்டன.
கரூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் முருங்கை உற்பத்தி உள்ளதால் இவை முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் முருங்கை சாகுபடி 53 ஆயிரத்து 500 ஏக்கர் என்ற நிலப்பரப்பு அளவில் உள்ளது.
இக்கண்காட்சியின் தொடக்க விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், குறு, சிறு, நடுத்த்டர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி முதலானோர் கலந்துகொண்டனர்.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்கள் துறை அரசு செயலர் அருண்ராய், மாவட்ட ஆட்சியர், பிரபுசங்கர், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆறுமுகம், கீதாலட்சுமி, மத்திய அரசின் அபிடா மண்டலத்தலைவர் ஷோபனாகுமார் ஆகியோரும் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர்.
மேலும் படிக்க
PM- kisan திட்டத்தில் இனிமேல் விவசாயிகளுக்கு ரூ.9,000- அசத்தலான அறிவிப்பு!
Share your comments