PF கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களது அலுவலகத்தை மாற்றும் போது PF கணக்கை மாற்றத் வேண்டியதில்லை என்று EPFO வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி (PF) சேவை என்பது தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்காலத்திற்கான முக்கிய முதலீடாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) அறங்காவலர் குழு, ஊழியர்கள் வேலை மாறும்போது PF பணத்தை மாற்றுவது குறித்து ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
PF கணக்கு (PF Account)
நவம்பர் 20ம் தேதியன்று நடைபெற்ற EPFO அறங்காவலர் 229வது கூட்டத்தில் PF கணக்கின் மையப்படுத்தப்பட்ட IT அமைப்பை ஏற்றுக்கொண்டது. இது ஊழியர்கள் வேலை மாறும்போது PF நிதி நகர்த்தப்படுவதை தவிர்க்க அனுமதிக்கிறது. அந்த வகையில் ஒரு ஊழியர் வேலையை மாற்றும்போது அவர்களின் PF கணக்கு எண் அப்படியே இருக்கும். அதனால் PF கணக்கு பரிமாற்றத்தை பற்றி இனி ஊழியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
அதாவது வேலையை விட்டு வெளியேறிய பிறகு, PF கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போதைய விதிகளின்படி, முன்னாள் மற்றும் புதிய முதலாளிகளிடம் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
புதிய PF கணக்கு (New PF Account)
இந்த சிக்கலான மற்றும் நேரத்தை செலவழிக்கும் நடைமுறைகள் காரணமாக PF கணக்கு வைத்திருக்கும் பலர் தங்கள் பணத்தை புதிய கணக்கிற்கு மாற்றுவதில்லை. தவிர முந்தைய UAN எண்ணைப் பயன்படுத்தி புதிய நிறுவனத்தில் புதிய PF கணக்கு உருவாக்கப்படுகிறது.
மேலும் PF கணக்கு வைத்திருப்பவர் முந்தைய வணிகத்திலிருந்து இந்த பணத்தை மாற்றாததால், அது PF கணக்கில் உள்ள மொத்த தொகையைக் காட்டாது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க
ஆதார் மூலம் பணம் அனுப்பலாம்: மிக எளிய வழிமுறை!
ஆண்களுக்கு ஆஃபர்: குடும்பக் கட்டுப்பாடு செய்தால் இலவச வீட்டு மனை பட்டா!
Share your comments