1. Blogs

நீர்வாழ் உயிரி வளர்ப்பு மாதிரி திட்டத்தில் பயன்பெற தொழில்முனைவோருக்கு அழைப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Credit ; Daily thandhi

தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு (Invest) செய்திடும் நோக்கில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பயனர்கள்

மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவி குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

நிதி உதவி

இந்த திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சென்னை, காஞ்சீபுரம் (இருப்பு) நீலாங்கரை எண் 2/601, கிழக்கு கடற்கரை சாலை, மீன்வளம் மற்றும் மீனவர் நல துறை, உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 044- 24492719 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இந்த மாதம் 31-ந்தேதி ஆகும். மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

இந்தியாவில் எலக்ட்ரிக் சைக்கிள்: பிரிட்டிஷ் நிறுவனம் அறிமுகம்!

தனிநபர் தகவல்களை பகிர மாட்டோம் என உறுதி அளித்தது வாட்ஸ் ஆப்!

English Summary: Call for Entrepreneurs to Benefit from Aquaculture Model Project! Published on: 27 July 2021, 08:31 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.