1. Blogs

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய வழக்கு- அபராதம் விதித்த நீதிமன்றம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Case seeks permission for dance show - Court imposes fine!

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்காமல் வழக்கைத் தொடர்ந்ததாகக் கூறி, ரூ25 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிமன்றங்கள் எப்போதாவது வித்தியாசமான வழக்குகளைச் சந்திப்பது வழக்கம். அதேபோல் வித்தியாசமானத் தீர்ப்பும் வழங்கப்படுவதும் சகஜம். அந்த வகையில், வித்தியாசமானத் தீர்ப்பு அளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

திருப்பூர் மாவட்டம் உடையர்பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி பன்னீர்செல்வம் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வகுரம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பெரியசாமி என்பவரும், திருப்பத்தூர் மாவட்டம் சின்னக்கமையம்பட்டு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி கோவிலிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ரமேஷ் என்பவரும் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பூர் மாவட்ட கோவிலுக்கு அனுமதி கோரி காவல்துறையில் விண்ணப்பித்த அன்றே வழக்கு தொடர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், விண்ணப்பத்தை பரிசீலிக்க காவல்துறைக்கு போதிய அவகாசம் வழங்காமலும், நீதிமன்றத்தில் ஆதாரங்களை மறைத்தும் தொடரப்பட்ட வழக்கு என கூறி, 25ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த அபராத தொகையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!

மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!

English Summary: Case seeks permission for dance show - Court imposes fine! Published on: 13 May 2022, 12:01 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.