இந்தியாவில் ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கான EPF கணக்கில் நிறுவனங்கள் பங்களிப்பு தொகையை செலுத்தவில்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வட்டி தொகை
இந்தியாவில் ஊழியர்களுக்கான PF கணக்கு தொடர்பான பங்களிப்புகளை EPFO நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பொதுவாக PF கணக்கில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகள் பங்களிப்பு தொகையை முதலீடு செய்ய வேண்டும். இந்த பங்களிப்பு தொகையை சரியான நேரத்தில் முதலீடு செய்யவில்லையெனில் EPFO நிறுவனம் வட்டி வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, ஊழியர்களின் PF கணக்கில் நிறுவனத்தின் முதலாளிகள் சரியான நேரத்தில் முதலீடு செய்யவில்லையெனில் ஊழியர்களுக்கு வட்டி இழப்பு ஏற்படும். அதனால் நிறுவனங்கள் ஊழியருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
இந்த தொகை ஒவ்வொரு மாத கால தாமதத்திற்கும் வேறுபடுகிறது. அதன்படி நிறுவனங்கள் 2 மாதங்கள் வரை பங்களிப்பு செய்ய தவறினால் 5 சதவீதம் அபராத தொகையும், இதே போல் 2 முதல் 4 மாதங்கள் வரை தாமதமானால் 10% வரை அபராத தொகை செலுத்த வேண்டும். இதை தொடர்ந்து, 4 முதல் 6 மாதங்கள் வரையிலான தாமதத்திற்கு 15% அபராதமும், 6 மாதத்திற்கும் மேல் நிறுவனங்கள் PF கணக்கில் முதலீடு செய்ய தவறினால், 25% வரையும் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
PF பணத்தை குறிவைக்கும் மோசடி கும்பல்: எப்படி பாதுகாப்பது?
புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்: விவசாயிகளுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு!
Share your comments