1. Blogs

கொரோனா ஊரடங்கால் நன்மை- IES தேர்வில் சாதனை படைத்த விவசாயி மகன்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அதிகாரியாக வேண்டும் என்பது நம்மில் பலரது ஆசையாக இருக்கும். இருப்பினும், அதற்கு தேவையானத் தகுதிகளை வளர்த்துக்கொண்டு, அர்ப்பணிப்போடு முயற்சித்தால் எதுவும் சாத்தியமே.

2-ம் இடம் (2nd place)

அந்த வரிசையில் விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஐ.இ.எஸ் தேர்வில் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் முயற்சியும், கடினஉழைப்பும் இருந்தால், யார் வேண்டுமானாலும் மத்திய அரசின் அதிகாரியாக முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

தேர்வு (Choice)

கடந்த ஆண்டு அக்டோபரில் ஐ.இ.எஸ். எனப்படும் இந்திய பொருளாதாரச் சேவைகள் பிரிவுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.

தேர்வு முடிவுகள் (Exam results)

அதில் ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயியின் மகனான தன்வீர் அகமது கான் பங்கேற்று தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் தன்வீர், தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஓட்டுநர்  (Driver)

ஸ்ரீநகரில் இருந்து 80 கி.மீ., தொலைவில் உள்ள நிகீன்பூரா குந்த் என்ற குக்கிராமத்தில் வசித்து வரும் தன்வீர், அரசு கல்லுாரியில், பி.ஏ., பட்டப்படிப்பு பயின்றார். பின், எம்.ஏ., மற்றும் எம்.பில்., பட்டம் பெற்ற இவர், வறுமையில் வாடும் தன் குடும்பத்திற்கு உதவ, கோல்கத்தாவுக்கு சென்று ஓட்டுநர்  வேலை செய்தார்.

படிப்பில் முழு கவனம் (Full focus on study)

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது, வீட்டில் இருந்தபடி ஐ.இ.எஸ்., தேர்வுக்காக படித்துள்ளார். ஆறு மாதங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி சிறந்த முறையில் தேர்வு எழுதிய தன்வீர், தற்போது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

கொரோனாவால் நன்மை (Benefit by corona)

இந்தியாவில் கோரதாண்டவம் ஆடிவரும் கொரோனாவால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இருந்தபோதிலும், கொரோனா ஊரடங்கை சரியாகப் பயன்படுத்திக்கொண்டதால், இந்த விவசாயி மகனால், இப்படியொரு சாதனைப் படைக்க முடிந்தது என்பது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க...

மேட்டூர் கால்வாயில் 13 ஆண்டுகளுக்கு பின் பாசனத்திற்கு நீர் திறப்பு

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

English Summary: Corona Curvature Benefit - Farmer's Son Achieves IES Exam! Published on: 02 August 2021, 10:24 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.