பணம் என்றால் பிணமும் வாயைத்திறக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு ஏற்றாற்போல, பணத்தைக் கொள்ளையடிக்க நினைப்பவர்கள் எந்தச் சூழ்நிலையையும் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்வார்கள் என்பதற்கு சென்னையில் நடைபெற்றக் கொள்ளைச் சம்பவமே சாட்சி.
ரூ.7.36 லட்சம் கொள்ளை (7.36 lakh robbery)
சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில், ஒரு ரேஷன் கடையில், கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 7.36 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
முதல் கையெழுத்து (The first signature)
வாக்காளர்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக, அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.
முதல் தவணை (First installment)
இதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதமும், 2-வது தவணை ஜூன் மாதமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரூ.7.36 லட்சம் அபேஸ் (Rs. 7.36 lakh looted)
இதன்படி மாநிலம் முழுவதும் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காவேரி நகர் நியாய விலைக் கடையில் கொரோனா நிவாரண நிதி கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 7.36 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணை (Police investigation)
இது தொடர்பாக அந்த ரேஷன் கடை மேற்பார்வையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சைதாப்பேட்டை காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இது குறித்த விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
டோக்கன் முறை (Token mode)
தற்போது கொரோனா (Coronavirus) இரண்டாவது அலைத் தீவிரமாக இருப்பதால், நிவாரண நிதியைப் பெற நியாய விலை கடைகளுக்கு வருபவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில், அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள. கூட்ட நெரிசலைத் தடுக்க ஏதுவாக வழங்க டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கடையில் 200 நபர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.
மக்களிடையே அதிர்ச்சி (Shock among the people)
இதற்கிடையில், கொரோனா நிவாரணத்துக்காக வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மேலும் படிக்க...
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!
Share your comments