1. Blogs

10 mins-இல் சுடச்சுட இட்லிக்குச் சுவையான இட்லி பொடி ரெசிபி!

Poonguzhali R
Poonguzhali R
Delicious Idli Powder Recipe for Baked Idli in 10 mins!

இட்லி என்றாலே நிறைய ஸ்பெஷலானா சைடிச்கள் இருக்கும். அதில் ஒன்று தான் இந்த இட்லி பொடி. இது இட்லிக்கு ஏத்ததாகவும், அட்டகாசமான சுவையிலும் காரசாரமாக இருக்கும். இந்த இட்லி பொடி இருந்தால் சாம்பார், சட்னி தேவை இல்லை. அப்படிப்பட்ட அற்புத சுவை தரும் இட்லி பொடி ரெசிபியைப் பார்க்கலாம்.

எவ்வளவு இட்லி சாப்பிட்டுள்ளோம் எனக் கணக்கே இல்லாமல் சாப்பிடும் அளவிற்கு சுவை தரக்கூடியதாக இந்த பொடி இருக்கும். இந்த இட்லி பொடி எளிமையாகச் செய்து விடலாம். இந்த இட்லி பொடி எப்படி செய்வதென்று இங்கே பார்க்கலாம்.

வெறும் 10 நிமிடங்களில் இந்த இட்லி பொடி ரெசிபியைச் செய்துவிடலாம். இதற்கு பாத்திரமாக ஒரு கடாய் தேவைப்படும். இங்கு கொடுக்கப்படும் அளவுப்பொருட்கள் நாங்கு உணவு உண்பவர்களுக்கு ஏத்த அளவுகளைக் கொண்டிருக்கும்.

தேவையான பொருட்கள்

  • ½ கப் உடைத்த உளுத்தம் பருப்பு (தோல் உள்ளது அல்லது இல்லாதது எதுவென்றாலும் இருக்கலாம்)
  • 9 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • ¼ கப் எள்ளு
  • 6 பல் பூண்டு (தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்)
  • ½ ஸ்பூன் கல்லு உப்பு
  • பெருங்காய கட்டி புரிந்தது சிறிய துண்டு 2

செய்முறை

  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும்.
  • வறுத்த உளுந்தைத் தனியாக ஒரு தட்டில் வைத்து ஆறவிடவும்.
  • பிறகு அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தட்டிய பூண்டு சேர்த்து சிவக்க வறுத்துவிட்டு அதனையும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே பானில் வர மிளகாய், மற்றும் கல்லு கல்லுப்பு சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும்.
  • இத்தகைய வறுத்த உளுத்தம் பருப்புடன் இதையும் சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • பிறகு எள்ளு சேர்த்து கருகாமல் வறுத்து உளுந்து, வரமிளகாயுடன் சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • அடுத்து ஒரு மிகச்சியில் அல்லது கல்லில் பூண்டை தவிர வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து அத்துடன் பெருங்காய கட்டி சேர்த்து கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.
  • பின்பு பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • இப்போது சுவையான இட்லி பொடி ரெடியாகி விட்டது.

அரைத்த இந்த இட்லி பொடியினை நன்கு ஆறிய பின் ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதம் வரை இதனை பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். வெறும் 10 நிமிடங்களில் இந்த சுவையான இட்லி பொடியினைச் செய்துவிடலாம்.

மேலும் படிக்க

ஒரு நாளைக்கு 2000 கஸ்டமர்கள்! கலக்கும் தமிழ்நாடு '90ஸ் கிட்ஸ் ஷாப்'!

முல்லைப் பெரியார் அணை நிலவரம்! மத்திய குழு ஆய்வு!!

English Summary: Delicious Idli Powder Recipe for Baked Idli in 10 mins! Published on: 28 March 2023, 05:26 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.