Life certificate
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நவ.1-ம் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி அரசு ஆணையிட்டுள்ளது.
ரூ.70 கட்டணம்
ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று தங்களது உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க சிரமப்படுகின்றனர். இந்நிலையில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சார்பில், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோமெட்ரிக் முறையில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate)
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களைத் தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியும். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது ‘Postinfo’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையைப் பதிவு செய்யலாம் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments