விதை பரிசோதனை என்பது விதையின் தரங்களான புறத்தூய்மை, ஈர்பபதம், முளைப்புத் திறன் மற்றும் பிற இரக விதைகளின் கலப்பு போன்றவற்றை ஆய்வு செய்து நல்ல தரமான விதைகள் கிடைக்கச் செய்வதே ஆகும். விவசாயிகள் பரிசோதித்த விதைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டுமென விதை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ரபி பருவத்திற்கான நடவு பணி தற்போது நடைபெற்று வருகிறது. விதைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே விதைகளை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளின் விவரத்தை விற்பனை ரசீதில் குறிப்பிடவும் அத்துடன் விவசாயிகளின் கையொப்பம் மற்றும் விற்பனையாளர் கையொப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
விவசாயிகள் விதைகள் வாங்கும் முன் விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் மற்றும் பருவம் ஆகியவற்றை அறிந்து வாங்க வேண்டும். உரிமம் இல்லாமலோ, காலாவதியான விதைகளையோ விற்பனை செய்தாலோ, விற்பனை ரசீது தர மறுத்தாலோ சம்பந்தப்பட்ட மண்டல விதை ஆய்வாளர் மற்றும் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகாரின் அடிப்படையில் விதை விற்பனையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments