சூரியகாந்தி எண்ணெய் தேவை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் அனைவரும் சூரியகாந்தி பயிரிட முன் வர வேண்டும் என வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் சூரியகாந்தி பயிரிடுவதற்கான ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது.
மத்திய அரசு தற்போது எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறது. எனவே உள்நாட்டு எண்ணெய் வித்துகளுக்கான சூரியகாந்தி விதைக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. குறுகிய கால பயிராகவும், குறைந்த சாகுபடிச் செலவு மற்றும் குறைவான பாசன வசதியே போதுமானது.
இந்தியா முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே விவசாயிகள் லாபம் தரும் சூரியகாந்தி பணப் பயிரை பயிரிட்டு பயன்பெறுமாறு வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் அதிக விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
Share your comments