இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மருத்துவ குணம் வாய்ந்த 2000 கருங்கோழிகளை வாங்க முன்பணம் கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வுக்கு பின் ராஞ்சியில் உள்ள தனது 43 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம், பால், கோழி, வாத்து பண்ணைகள் அமைத்து அதனை பரமாரிக்கும் பணிகளில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.
கோழிபண்ணை தொடங்கும் தோனி
விவசாயத்தில் அதிக நாட்டம் கொண்ட தோனி தற்போது கருங்கோழி பண்ணை அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக மத்திய பிரதேசத்தின் ஜபாவ் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி வினோத் மெஹ்தாவிடம் என்பவரிடம் இருந்து 2,000 கருங்கோழி குஞ்சுகளை வாங்க உள்ளார்
தோனியின் பண்ணையை சேர்ந்த நிர்வாகிகள் தன்னை தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுத்து அதற்கான முன்பணமும் செலுத்தியுள்ளதாக கூறுகிறார் விவசாயி வினோத், மேலும் டிச.15க்குள் கருங்கோழி குஞ்சுகளை ராஞ்சிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறினார். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரின் பண்ணைக்கு 2,000 கருங்கோழி குஞ்சுகளை வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
மருத்துவ குணம் கொண்ட கருங்கோழி
மருத்துவ குணம் கொண்ட கருங்கோழி அரிய வகையை சேர்ந்தது. குறைவான கொழுப்பு, அதிக புரதச்சத்து கொண்டது. மற்ற கோழிகளுடன் ஒப்பிடுகையில் கூடுதல் ருசியாக இருக்கும். ரத்தம், இறைச்சி என எல்லாமே கருப்பாக இருக்கும். மத்தியப்பிரதேசத்தில் உள்ள மலை வாழ் மக்கள் இவ்வகை கோழிகளை அதிகம் வளர்க்கின்றனர். ஒரு கிலோ கருங்கோழி கறி 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கருங்கோழி முட்டை ரூ. 20 முதல் ரூ. 40 ரூபாயாக உள்ளது. இந்தியா முழுவதும் கருங்கோழியின் தேவை அதிகமாக உள்ளது. இதனை அறிந்தே தோனி கருங்கோழி வளர்ப்பில் ஆர்வம் செலுத்துகிறார்.
மேலும் படிக்க...
50% மானியத்தில் 1000 கோழி குஞ்சுகள், முட்டை அடைகாத்தல் கருவி
PM-KISAN Scheme: 7-வது தவணை விரைவில், ரூ.6,000 பெற யார் தகுதியற்றவர்கள்? விவரம் உள்ளே!!
வடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம்!!
Share your comments