1. Blogs

ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறும் இ- சஞ்சீவினி திட்டம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
இ-சஞ்சீவினி

ஊரடங்கு காலத்தில் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் தங்களின் வீட்டில் இருந்தபடியே 'இ-சஞ்சீவினி' திட்டத்தின் மூலம் 'ஆன்லைன்' வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெற, மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறார். இதனால், தற்போது அவசர சிகிச்சையைத் தவிர்த்து மற்ற பிரச்சனைகளுக்கு மருத்துவமனைகளுக்குச் செல்ல முடிவதில்லை.

இதனால் நோய் வாய்ப் படும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இ-சிஞ்சீவினி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஆன்லைனில் (Online) இலவச மருத்துவ ஆலோசனை பெற்றுப் பயனடையலாம். வீட்டில் இருந்தே பாதிப்புகளைத் தெரிவித்து மருத்துவச் சிகிச்சை பெற இத்திட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

'இ-சஞ்சீவினி' (E-Sanjivini)

இ-சஞ்சீவினி' என்ற திட்டத்தின் மூலமாக 'ஆன்லைன்'ல் தங்களது பாதிப்பு விவரத்தைப் பதிவு செய்து, டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும்.

இத்திட்டத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மருத்துவ ஆலோசனை பெறலாம்.

  • நோயாளிகள் https://esanjeevaniopd.in/ என்ற இணையதள முகவரியில் தங்களது மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

  • வரப்பெறும் கடவுச்சொல்லை (Pass Word) 'டைப்' (Type) செய்து, 'இ-சஞ்சீவினி' பக்கத்துக்குள் செல்லலாம்.

  • தங்களைப் பற்றிய முழு விவரம் மற்றும் முகவரியை பதிவு செய்து 'கால் நவ்' (Call now) என்ற பட்டனை 'கிளிக்'(Click) செய்து, இணைப்பில் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

  • மருத்துவர்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு, எடுக்க வேண்டிய மருந்து, மாத்திரை விவரத்தை அனுப்பி வைக்கின்றனர்.அதனை மருந்தகங்களில் காண்பித்து மருந்துகளை வாங்கி பயன்படுத்தலாம்.நாடு முழுவதும் இந்த சேவை நல்ல பலனளித்து வருகிறது.

  • தமிழகத்தைப் பொருத்தவரை, திருப்பூர் மாவட்ட மக்கள் இந்த சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சேவையால் குணமடைந்து வருவதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Elavarase Sivakumar
Krish jagran

PM Cares : வென்டிலேட்டர்கள் தயாரிக்க பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!

PM Kisan: பி.எம்-கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஜூன் 30க்குள் பதிவு செய்யுங்கள்!

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்!!

English Summary: Government announces E-Sanjeevini Scheme to Get Medical Acne Online Published on: 27 June 2020, 05:36 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.