Interest free loans
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளும், சலுகைகளும் இருக்கின்றன. இதில் பண்டிகைக்கால அட்வான்ஸ் பணமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. பண்டிகை நேரத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 10,000 ரூபாய் பெற்றுக்கொண்டு வட்டி இல்லாமல் தவணையாக திருப்பிச் செலுத்தலாம்.
பண்டிகை கால முன்பணம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை அட்வான்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 10,000 ரூபாய் பணமாக வழங்கப்படுகிறது. இந்த 10,000 ரூபாய் பணத்துக்கு வட்டி கிடையாது. மேலும் தவணைகளாக பிரித்து திருப்பிச் செலுத்தலாம். இந்த பண்டிகை அட்வான்ஸ் தொகை 10,000 ரூபாய் மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படும். ஒவ்வொரு நிதியாண்டின் இறுதிக்குள் (மார்ச் 31) இந்த தொகையை மத்திய அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம். பெரும்பாலான ஊழியர்கள் ஹோலி பண்டிகைக்கு முன்பாக இந்த தொகை பெற்றுக் கொள்வார்கள்.
இந்த பண்டிகை அட்வான்ஸ் தொகை 10,000 ரூபாய்க்கு வட்டி வசூலிக்கப்படாது. மாதம் 1000 ரூபாய் என 10 தவணைகளாக பிரித்து இந்த தொகையை அரசுக்கு திருப்பிச் செலுத்தலாம். பண்டிகை காலம் என்றாலே புது துணி எடுப்பது, வீட்டுக்கு புதிய பொருட்கள் வாங்குவது என செலவுகள் வந்துவிடும். இந்த செலவுகளுக்காக பண்டிகை அட்வான்ஸ் தொகையை பயன்படுத்தலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான பண்டிகை அட்வான்ஸ் திட்டத்துக்கு நிதியமைச்சகம் ஆண்டுதோறும் 4000 கோடி ரூபாய் முதல் 5000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்கிறது.
மேலும் படிக்க
மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவு வெளியாகும்: TNPSC உறுதி!
ரெப்போ வட்டி உயர வாய்ப்பு: வங்கி கடன் வாங்கியோருக்கு EMI உயரும் அபாயம்!
Share your comments