மாத வருமானம் வாங்கும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, PF கண்க்கிற்காக ஒரு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. PF கணக்கில் நாமினி நியமிக்கப்படவில்லை என்றால், பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் தொகை எதுவுமே கிடைக்காது.
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் இது, அவர்களுடைய வைப்பு நிதி கணக்கில் மாதாமாதம் செலுத்தப்படும். இந்த தொகை ஊழியர் பணி ஓய்வு பெற்ற பிறகு மொத்தமான தொகையாகவும் அல்லது மாதாந்திர பென்ஷன் போலவோ வழங்கப்படும்.
தற்பொழுது ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் பிஎஃப் கணக்கின் நன்மைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமானால், ஊழியர்கள் தங்களுடைய PF கணக்கில் நாமினியை சேர்க்க வேண்டும்.
கடைசி தேதி (Last Date)
டிசம்பர் 31, 2021, அதாவது இந்த ஆண்டின் இறுதிக்குள் நாமினி நியமிக்கப்படவில்லை என்றால் பிஎஃப் கணக்கில் இருந்து பெறப்படும் பென்ஷன் (Pension) மற்றும் இன்சூரன்ஸ் (Insurance) தொகை எதுவுமே கிடைக்காது.
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிஎஃப் தொகை, எதிர்காலத்தின் நிதி தேவைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதோடு, ஊழியர் பணிபுரியும் காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவருடைய குழந்தை, கணவன்/மனைவி பெற்றோர்கள் ஆகியோருக்கும் உதவியாக இருக்கும். எனவே நாமினேஷன் தகவல்களை பிஎஃப் கணக்கில் அப்டேட் செய்வது அவசியம்.
நாமினி (Nominee)
ஊழியர் இறந்து போனால் பிஎஃப் கணக்கில் இருந்து பெறக்கூடிய எல்லா நன்மைகளையும் அதாவது இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் உட்பட எல்லா நன்மைகளையும் நாமினியால் தொடர்ந்து பெற முடியும்.
மேலும் படிக்க
Share your comments