மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்சியாக தங்களின் ஓய்வூதியத்தை பெறுவதற்கு சில முக்கிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை பற்றிய முழு விவரமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் (Pension)
ஜீவன் பிரமான் பத்ரா என்றும் அழைக்கப்படும் வாழ்க்கைச் சான்றிதழ்கள், ஓய்வூதியம் பெறுபவர்களின் இருப்பை உறுதி செய்யும் முக்கியமான ஆவணமாகும். குறிப்பிட்ட நபர்கள் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாக இந்த ஆவணம் செயல்படுகிறது. அரசு ஓய்வூதியம் பெறுவோர், தங்களுடைய ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1ம் தேதி முதல் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நடப்பு ஆண்டில் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆண்டு வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் சில முறைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
நேரடி முறை
மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர், நேரடியாக ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் (PDAs) தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
ஜீவன் பிரமன் போர்ட்டல்
ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமான் போர்ட்டலைப் பயன்படுத்தி ஆன்லைனில் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம். யுஐடிஏஐ-ஆணையிடப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி ஓய்வூதியம் பெறுபவர் தங்கள் கைரேகைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். கைரேகை சாதனத்தை மொபைல் போனுடன் இணைக்க OTG கேபிளைப் பயன்படுத்தலாம்.
வீட்டு சேவை
12 பொதுத்துறை வங்கிகளை உள்ளடக்கிய கூட்டணி மூலமாகவும் டோர்ஸ்டெப் பேங்கிங் வழங்கப்படுகிறது மற்றும் நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய நகரங்களில் அதன் வாடிக்கையாளர்களுக்கு “டோர்ஸ்டெப் பேங்கிங்” வழங்குகிறது. வங்கி முகவர் சேவையை வழங்க ஓய்வூதியதாரரின் வீட்டுக்கு வந்து ஆவணங்களை பெற்றுக் கொள்வார்.
மேலும் படிக்க
மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி: இந்த திட்டம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு!
Share your comments