தபால்காரர் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் சான்றிதழ் (Life Certificate)
பென்சன் வாங்கும் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்தப் பத்திரத்தை பென்சன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா போன்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
பென்சன் வாங்கும் ஒவ்வொரு மூத்த குடிமக்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் சமர்ப்பிக்காவிட்டால் பென்சன் கிடைக்காது. எனவே பென்சன் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால் நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தபால்துறை (Post Office)
மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை (ஆயுள் சான்றிதழ்) சமர்ப்பிக்கும் சேவையை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது.
மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் EPFO ஓய்வூதியம் பெறுவோர்களை 1 நவம்பர் 2022 முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதறழை சமர்ப்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 ரொக்கமாக தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
தபால் வங்கி (Postal Bank)
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும். இந்திய அஞ்சல் துறையின்சார்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) நாடு தழுவிய அளவில் 2018 செப்டம்பர் 1ஆம் தேத்9 துவங்கப்பட்டு, இந்த குறுகிய காலத்தில் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள 136000 அஞ்சலகங்களுக்கு வங்கி சேவைகளை விரிவுபடுத்தி 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: சம்பளத்தை உயர்த்தும் அரசு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான திட்டம்: விண்ணப்பிக்க மார்ச் 2023 தான் கடைசி!
Share your comments