இந்தியாவில் வேலை செய்யும் ஊழியகர்கள் அனைவரும், வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். இதில் சேமிக்கப்படும் தொகையானது வயது முதிவிற்கு பின்னர் வருமானம் தரும் ஒன்றாக அமைந்துள்ளது. அதன்படி பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களின் மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையானது பிடித்துக்கொள்ளப்படுகிறது. அந்த தொகை ஓய்வுக்கு பின்னர் அதே அளவு பணம் அந்த ஊழியர்களுக்கு நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும்.
EPFO திட்டம் (EPFO Scheme)
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது மத்திய அரசின் உயர்மட்ட ஓய்வூதிய அமைப்பான இபிஎஃப்ஓ, ஊழியர்களுக்காக ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதனால் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அதில் இருந்து பெறப்பட்ட கார்பஸ் திரும்பப் பெற முடியும். பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச பங்களிப்பு ஊதியத்தில் 12% ஆகும், ஆனால் ஊழியர்கள் 100% வரை பங்களிக்கலாம்.
PF வட்டி (PF Interest)
அடுத்து, இரண்டு பங்களிப்புகளும் ஒன்றாக சேர்க்கப்பட்ட பிறகு ஊழியர்களது பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டி தொகையை பெறுவார்கள். தற்போதைய நிலவரப்படி அரசு இபிஎஃப் பங்களிப்புகளுக்கு 8.5% வட்டி விகிதங்களை வழங்குகிறது. அரசாங்கம் வட்டி விகிதத்தை அறிவித்ததும் இபிஎஃப்ஓ மாத வாரியாக நிலுவை தொகையை கணக்கிடுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் இருப்பில் கிடக்கும் பணத்தை கூட்டுவதன் மூலம் வட்டி கணக்கிடப்படுகிறது.
பின்னர் அது வட்டி விகிதத்துடன் பெருக்கப்பட்டு, 1200ஆல் வகுக்கப்படுகிறது. வட்டி விகிதம் 8.1 சதவீதம் மற்றும் மாதாந்திர இருப்புத் தொகை ரூ 10,00,000 எனில், வட்டித் தொகை 1104740x 8.1/1200= ரூ 6,750 ஆக இருக்கும்.
மேலும் படிக்க
Post Office: தினசரி 417 ரூபாய் முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் வருமானம்!
Share your comments