உலகின் பணக்கார பிச்சைக்காரர் என அடையாளம் காணப்பட்டுள்ள பாரத் ஜெயினின் சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி. இருந்தாலும், தொடர்ந்து அவர் பிச்சை எடுத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல நாடுகளைப் போலவே இந்தியாவும் வறுமையில் வாடும் அதிக மக்கள் தொகையினை கொண்டுள்ளது. ஊனமுற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள் பிச்சை எடுத்து வரும் நிலையில் வறுமை பசியில் வேறு வழியின்றி பிச்சை எடுக்க தொடங்கிய நபர் இன்று இந்திய மதிப்பில் ரூ. 7.5 கோடிக்கு சொந்தக்காரர் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
ஒருநாளைக்கு வருமானம் எவ்வளவு?
உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரராக அடையாளம் காணப்பட்டுள்ளார் பாரத் ஜெயின். பொருளாதார நெருக்கடியான குடும்பத்தில் பிறந்த அவரால் முறையான கல்வியைத் தொடர முடியவில்லை. வேறு எவ்வித வாய்ப்புகளும் கிடைக்காத நிலையில் தான் பிச்சை எடுக்கத் தொடங்கினார்.
சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் அல்லது ஆசாத் மைதானம் போன்ற முக்கிய இடங்களில் பாரத் ஜெயின் அடிக்கடி காணப்படுகிறார். 10 முதல் 12 மணி நேரத்திற்குள், அவர் ஒரு நாளைக்கு 2000-2500 ரூபாய் வரை பிச்சை எடுப்பதன் மூலம் பணம் ஈட்டுகிறார். இதை தொகையை மற்றவர்கள் ஈட்ட ஜெயினை விட இரண்டு மடங்கு நேரம் யாசகம் எடுக்க வேண்டும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இன்று அவரின் சொத்து மதிப்பு 7.5 கோடிகள் ($1 மில்லியன்). உண்மையில் சொல்லப்போனால் பாரத் ஜெயின் பிச்சை எடுப்பதன் மூலம் பெறுகிற வருமானம் மிகக் குறைவு. பிச்சை எடுப்பதன் மூலம் அவருடைய மாத வருமானம் ரூ.60,000-ரூ. 75,000 வரை இருக்கும். பிச்சை எடுப்பதன் மூலம் ஈட்டும் தொகையினை ரியல் எஸ்டேட்டில் அவர் செய்யும் புத்திசாலித்தனமான முதலீடும்தான் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
மும்பையில் ரூ. 1.2 கோடி மதிப்புள்ள இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பையும், தானேயில் இரண்டு கடைகளையும் வைத்திருக்கிறார். அந்த கடைகளுக்கு மாத வாடகையாக ரூ.30,000 வருமானம் ஈட்டுகின்றன.
இன்றளவும் புரியாத புதிர், அவர் ஏன் இன்னும் பிச்சை எடுக்கிறார் என்பது தான். பாரத் ஜெயின் திருமணமானவர் மற்றும் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரையும் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார். அவரது உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என யார் சொல்லியும் அவர் பிச்சை எடுப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அனைவருக்குமான கல்வி, திறன் பயிற்சி, நிலையான வேலை வாய்ப்பினை ஒரு சமூகமாக நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவது பாரத் ஜெயின் போன்றவர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளாமல் செய்ய முடியும். மேலும் சமூகத்தில் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் காண்க:
RD ஆரம்பிக்க சரியான நேரம்- வட்டி விகிதத்தை உயர்த்திய நிதித்துறை!
Share your comments