இளமைக்காலத்தில், கடினமாக உழைப்பதுடன், எதிர்காலத்திற்காகச் சேமிப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டால், ஓய்வுகாலம் கவுரவமானதாகவும், நிம்மதியானதாகவும் இருக்கும்.
கோடீஸ்வரர் ஆக (Become a Millionaire)
இதற்குக் குறைந்த காலத்தில், அதிக லாபம் தரும் பல்வேறுத் திட்டங்களும் உள்ளன. அவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து, முதலீடு செய்தால், நீங்களும் ஓய்வுபெறும் காலத்தில் கோடீஸ்வரர் ஆக முடியும்.
அந்த வகையில், தொடர்ச்சியான முதலீட்டில் கோடிகளில் லாபம் ஈட்டுவது எப்படி என்று பார்க்கலாம்.
பிபிஎஃப் (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச் சிறந்த வழியாக உள்ளது. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்ல.
பல்வேறு சலுகைகள் (Various offers)
வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையைச் சேமித்து நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய லாபத்தை ஈட்டபிஎஃப் சேமிப்பு உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
முதிர்வுகாலம் (Maturity)
தற்போதைய நிலையில், பிஎஃப் திட்டத்தில் 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்துக்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
பிபிஎஃப் திட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறோமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்கினால் திட்டத்தின் முதிர்வு காலத்தில் பெரிய தொகையை ஈட்ட முடியும்.
ரூ.1 கோடி (Rs. 1 crore)
எடுக்காட்டகாக 30ஆவது வயதில் பிபிஎஃப் திட்டத்தில், மாதம் ரூ.9,000 முதலீடு செய்தால் 15 ஆண்டுகள் கழித்து மொத்தம் ரூ.29,29,111 கிடைக்கும். ஒருவேளை முதிர்வு காலம் முடிந்த பிறகு மேலும் 15 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நீட்டித்தால் 30 ஆண்டுகள் கழித்து கையில் ரூ.1,11,24,656 இருக்கும். அதாவது ரூ.1.11 கோடி.
வட்டி 78 லட்சம் (Interest 78 lakhs)
இதில் உங்களது முதலீட்டுப் பணம் ரூ.32,40,00 மட்டுமே. வட்டி வருமானம் ரூ.78,84,656. எனவே இத்திட்டம் நீண்ட கால அடிப்படையில் பெரிய வருமானத்தைத் தரும் திட்டமாக உள்ளது. இதில் முதலீட்டு அபாயமும் இல்லை. உங்களுடைய பிபிஎஃப் கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகு அதை மூடிவிட்டு முழுத் தொகையையும் எடுக்கலாம்.
வரி விலக்கு (Tax deductible)
அப்போது நீங்கள் எடுக்கும் முழுத் தொகையும் வரி விலக்கு பெற்றிருக்கும். இந்தத் தொகை அனைத்தும் உங்களது வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இருப்பினும், இதைப் பெறுவதற்கு நீங்கள் உங்களது வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு ஒரு படிவத்தைக் கொடுக்க வேண்டும்.
மேலும் படிக்க...
டென்ஷனில்லாமல் பென்சன் வாங்கனுமா? ரூ.74,300 பென்ஷன் தரும் அசத்தல் திட்டம்!
தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எப்படி உறுப்பினராவது?
SBI-யின் அதிரடி ஆஃபர்! பிரிமியமே இல்லாமல் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ்!
Share your comments