நாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
பல்வேறு துறைகளில், தனியார் பங்களிப்பை உறுதி செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக சில விமான நிலையங்களில் தனியார் மூலம் நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் பயன்பாடு அதிகம் உள்ள ரயில்வே துறையில் தனியாரை ஈடுபடுத்தவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வந்தது.
குறிப்பாக பயணியர் ரயில் போக்குவரத்தில் (Passenger Train Service) ஆண்டிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதால், சில வழித்தடங்களில் தனியார் ரயிலை இயக்குவதற்கு அனுமதி வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்தது.மேலும், ரயிலின் வருவாயைப் பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டன.
முதல் தனியார் ரயில் (First Private Train)
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதன் விளைவாக, டெல்லி மற்றும் உத்திரபிரதேசத்தின் லக்னோ இடையே தனியார் ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் தனியார் ரயில் என்ற பெருமையைப் பெற்றது. இந்த முயற்சி வெற்றி பெற்றதுடன், இந்த சேவைக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
தனியாருக்கு அழைப்பு (private participation for operation)
இதைத்தொடர்ந்து, நாட்டின் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி,109 வழித்தடங்களிலும், அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த, ரயில்கள் இயக்கப்படும்.
கூடுதல்வேகம் (Fastest Train)
தனியார் நிறுவனங்களின் முதலீட்டில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் தனியார் ரயில், திட்டமிட்ட இலக்கை, குறைந்த நேரத்தில் அடைய ஏதுவாக, கூடுதல் வேகத்தில் செல்லும் வகையில் வடிவைமைக்கப்பட உள்ளது.
இந்த 109 வழித்தடங்களில் அதிகபட்சம் 16 பெட்டிகளைக் கொண்ட(Coaches) 151 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவை அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.
இலக்குகள் (Initiatives)
தனியார் நிறுவனங்கள், ரயில் பராமரிப்பைக் குறைப்பதற்கான நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுடன், பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதைத் தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மேலும் ரயில்வே பரிந்துரை செய்துள்ள தரம், பரமாரிப்பு ஆகியவற்றுடன் சரியான நேரத்திற்கு புறப்படுதல், குறித்த நேரத்தில் சென்றடைதல், ரயிலின் உள்ளே சுத்தத்தைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல ரயில் நிலைய பராமரிப்பு செலவிடும் பெருந்தொகையை குறைக்கும் வகையில், ரயில் நிலைய பராமரிப்பு பணிக்களை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ள முன்வந்தால், ரயில்வே மண்டல மேலாளர்கள் (Divisional Railway Managers) அனுமதி அளிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கென ஒதுக்கப்படும் வழித்தடங்களில் அதிகபட்சமாக 35 ஆண்டுகள் ரயிலை இயக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும் எதிர்பார்க்கப்படுவதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க..
ஜன்தன் திட்ட தமிழக பெண் பயனாளிகளுக்கு ரூ.610 கோடி நிதி - நிர்மலா சீதாராமன்.
மனஅழுத்தத்தை குறைக்கும் பத்மாசனம்!!
Share your comments