மருத்துவக் குணங்கள் உடையதாக மஞ்சள் (Turmeric) எப்படி உருவானது என்பது தொடர்பாக முதல் முறையாக அதன் மரபணு குறித்த ஆய்வை, மத்திய பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர்.
கிருமி நாசினி (Gems Killer)
அதிகளவு மருத்துவ குணங்கள் உடையது மஞ்சள். இயற்கையில் உருவான கிருமி நாசினியாக இது விளங்குகிறது. மஞ்சளின் பலன்கள், அதன் மருத்துவ குணங்கள் குறித்து பல ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால், மஞ்சளுக்கு இந்த மருத்துவ குணங்கள் எப்படி வந்தன என்பது தொடர்பான மரபணு சோதனையை, போபாலைச் சேர்ந்த இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நடத்திஉள்ளனர்.
இது குறித்து, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மையத்தின் உயிரியல் பிரிவு பேராசிரியர் வினீத் சர்மா கூறியுள்ளதாவது: நம் நாட்டில் இயற்கையாகவே, பல மருத்துவ குணங்கள் உடைய மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகைகளின் மருத்துவ குணங்கள் குறித்து பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால், இந்த மூலிகைகளுக்கு எப்படி இந்த மருத்துவ குணங்கள் கிடைத்தன என்பது குறித்து ஆராயப்பட்டது.
மரபணு சோதனை (Genetic Test)
மஞ்சளின் மரபணு வளர்ச்சி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. உலகிலேயே முதல் முறையாக, இது போன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனிப்பாதை
பூமிக்கு அடியில் வளர்வதால், மஞ்சள் மிகவும் அழுத்தத்துக்கு இடையே வளர வேண்டியுள்ளது. மேலும் தனக்கு தேவையான பச்சையத்தை பெறுவது போன்றவற்றுக்காக, தனக்கென தனிப் பாதையை அது உருவாக்கி கொள்கிறது. அதற்கேற்ப தன் வளர்சிதை மாற்றத்தை மஞ்சள் பயிர் மாற்றிக் கொள்கிறது. இதுவே, மஞ்சளுக்கு மருத்துவக் குணங்களை அளிக்கின்றது.
இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் பல முக்கியமான தகவல்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க
குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
மாடித் தோட்டம் அமைக்க மானிய விலையில் செடி, விதைகள்! தொடங்கி வைத்தார் முதல்வர்!
Share your comments