ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்வது உண்மையில் மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வயது அதிகமாகும் போது மூளையில் ஏற்படும் விளைவுகளை இசைக்கருவிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் தாமதப்படுத்த இயலும் எனவும் கண்டறிந்துள்ளனர்.
மூளையில் இசையினால் ஏற்படும் நேர்மறையான விளைவுகள் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது மனநிலை சீராக இருக்கவும் மற்றும் மன அழுத்தத்திலிருந்து உடனடியாக விடுபடவும் இசை பெரிதும் உதவுகிறது. இசை மூளையின் பிற உணர்ச்சிப் பகுதிகளையும் எளிதில் தூண்டுகிறது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வில் தான் ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வது உண்மையில் மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இளம், வயதான இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் அல்லாதவர்களின் மூளையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவில் மூளையின் பகுதிகளை உடற்பயிற்சி செய்வதன் மூலமும், ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாசிப்பதன் மூலமும் மூளையை "கூர்மையாகவும், இளமையாகவும் வைத்திருப்பதுடன் குறிப்பிட்ட வேலைகளில் நாம் கவனம் செலுத்தவும்" உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள சீன அறிவியல் அகாடமி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், நீண்ட கால இசைப் பயிற்சியானது, மனதை இளமையாக வைத்திருக்க முக்கிய பங்காற்றுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
மூளையின் அறிவாற்றல் செயல்பாடு என்பது அறிவைப் பெறுதல், தகவல்களைக் கையாளுதல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றில் ஈடுபடும் மன செயல்முறைகளைக் குறிக்கும். இதில் உணர்தல், நினைவாற்றல், கற்றல், கவனம், முடிவெடுக்கும் திறன் மற்றும் மொழி திறன் ஆகியவை அடங்கும். சத்தமான சூழ்நிலைகளில் ஆடியோவிஷுவல் கண்டறிவதில் வயதானவர்கள் மற்றும் இளம் இசைக்கலைஞர்களுக்கான மூளையின் செயல்பாடுகள் ஒன்றாகவே உள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் முன்கூட்டியே முதுமை அடையும் தோற்றத்தை பெற்றுவிடுகின்றனர். செல்களின் செயல்பாடுகள் திறன் குறையும் நிலையிலும், வயதாகும்போது இயற்கையான அறிவாற்றலும் வீழ்ச்சியடையும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆய்வின் படி, மிகவும் பொதுவான வயது தொடர்பான அறிவாற்றல் குறைபாடுகளில் ஒன்று சத்தமான சூழ்நிலைகளில் பேச்சைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது. இசைக்கருவி கற்றுக் கொள்வது, அதனை வாசிப்பது மூளையின் செயல்பாடுகளை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
வயதான இசைக்கலைஞர்கள் மத்திய செவிவழி செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளனர் மற்றும் அவர்களின் செவிப்புலன் செயலாக்கம் மற்றும் அறிவாற்றல் திறன்கள் மேம்பட்ட நிலையில் உள்ளன. இது தவிர, இசைப் பயிற்சியானது செவித்திறன் மற்றும் இளைஞர்களின் பேச்சுப் பிரதிநிதித்துவத்தின் நரம்பியல் தனித்துவத்தை மேம்படுத்தியுள்ளது எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
pic courtesy: ED times
மேலும் காண்க:
கோடைக்காலத்தில் வால்நட் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா?
Share your comments