எல்.ஐ.சி. நிறுவனத்தின் இந்த பாலிசி மூலமாக ஒவ்வொரு மாதமும் 233 ரூபாய் பிரீமியம் செலுத்தினாலே போதும். ரூ.17 லட்சம் லாபம் கிடைக்கும்.
பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், கடைசிக் காலத்தில் நிதி ரீதியாக உதவி செய்யவும், ஆயுள் காப்பீடு (Life Insurance) வழங்கவும் நிறைய திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் எல்.ஐ.சி. ஜீவன் லாப் திட்டம். இத்திட்டம் பங்குச் சந்தையுடன் தொடர்பற்றது. எனவே முதலீட்டுத் தொகையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
சிறப்பம்சங்கள் (Special Features)
இந்த பாலிசியில் உறுதியான லாபம் கிடைப்பதோடு, பணமும் பாதுகாப்பாக இருக்கும். 8 முதல் 59 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை வாங்கலாம். 16 முதல் 25 ஆண்டுகள் வரையில் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்ச உறுதித் தொகை ரூ.2 லட்சம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. மூன்று ஆண்டுகள் கழித்து கடன் பெறும் வசதியும் உள்ளது.
இறப்புச் சலுகைகள்!
பாலிசி முதிர்வு காலத்துக்கு முன்னரே பாலிசிதாரர் ஒருவேளை இறந்துவிட்டால் அவரது நாமினிக்கு பாலிசித் தொகை முழுவதும் கிடைக்கும். ஆனால், பிரீமியம் (Premium) தொகை முழுவதும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கூடுதல் போனஸ் தொகையும் நாமினிக்கு வழங்கப்படும்.
மேலும் படிக்க
PF கணக்கு இருக்கா? இந்த மாத இறுதிக்குள் நீங்கள் இதை செய்தே ஆக வேண்டும்!
Share your comments