பல வகையான பாலிசி திட்டங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) உள்ளன. நீங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க விரும்பினால் எல்ஐசியின் இந்தத் திட்டம் உங்களுக்கு உதவும். அதில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பணம் கிடைக்கும். இந்த பாலிசியின் பெயர் சரல் பென்சன் யோஜனா. இதில் நீங்கள் 40 வயது முதல் ஓய்வூதியம் பெறலாம்.
பென்சன் திட்டம் (Pension Scheme)
ஒரு வகையான ஒற்றை பிரீமியம் ஓய்வூதியத் திட்டமாகும். இதில் நீங்கள் ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். அதேநேரம், நீங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கலாம். பாலிசிதாரரின் மரணத்துக்குப் பிறகு நாமினிக்கு ஒற்றை பிரீமியத்தின் தொகை திருப்பி அளிக்கப்படும். இந்த பாலிசி எடுத்த உடனேயே ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவீர்கள்.
ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருக்கும் வரை, அவர் ஓய்வூதியத்தைப் பெறுவார். அவர் இறந்த பிறகு, அடிப்படை பிரீமியம் தொகை அவரது நாமினிக்கு திருப்பித் தரப்படும். கணவன் - மனைவிக்கான கூட்டு பாலிசியில் இருவருக்கும் கவரேஜ் உள்ளது. முதன்மை ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருக்கும் வரை, அவர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவார். அவர் இறந்த பிறகு அடிப்படை பிரீமியத்தின் தொகை அவரது நாமினிக்கு ஒப்படைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் பயன் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள். அதிகபட்சம் 80 ஆண்டுகள். இதில் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். சரல் பென்சன் பாலிசியை தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம். மாதந்தோறும் ஓய்வூதியம் பெறலாம். இது தவிர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையிலும் எடுத்துக்கொள்ளலாம்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் (Minimum Pension)
மாதந்தோறும் பணம் வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1000 ரூபாய் ஓய்வூதியம் எடுக்க வேண்டும். இதில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12000 என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு இல்லை. உங்களுக்கு 40 வயதாகி, 10 லட்சம் ரூபாய் பிரீமியமாக டெபாசிட் செய்திருந்தால், நீங்கள் ஆண்டுக்கு 50,250 ரூபாய் பெறுவீர்கள்.
அது வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இது தவிர, நீங்கள் டெபாசிட் செய்த தொகையை நடுவில் திரும்பப் பெற விரும்பினால், 5 சதவீதத்தை கழித்த பிறகு, நீங்கள் டெபாசிட் செய்த தொகை திருப்பி வழங்கப்படும்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: என்ன சொன்னார் முதல்வர்?
ICICI வங்கியில் பிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
Share your comments