Image credit: New indian express
இந்தியாவில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் 4.58 கோடி பெண்கள் காணாமல் போயுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நா. மக்கள் தொகை நிதியம் , சர்வதேச மக்கள் தொகை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 50 ஆண்டுகளில் உலகளவில் காணாமல் போகும் பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 1970ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டு காலத்தில் 6.10 கோடி பெண்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் 1970 - 2020ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் மாயமான பெண்களின் எண்ணிக்கை 14.26 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்கள் மாயம்
பெண் சிசு என்று தெரிந்து கருக்கலைப்பு செய்வது, பிறந்து உயிரிழக்கும் பெண் குழந்தைகள் ஆகியவையும் இந்த காணாமல் போன பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 4.58 கோடி பெண்கள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில், 2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 4.60 லட்சம் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் மாயமாகியுள்ளனர். உலகளவில் மாயமான பெண்களில் 21 சதவீதம் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அறிக்கை காட்டுகிறது, இது 2015-16 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 26.8 சதவீதமாக இருக்கிறது.
மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில், கடந்த 50 ஆண்டு காலத்தில் 7.23 கோடி பெண்கள் மாயமாகியுள்ளனர்.
பெண் குழந்தைகள் இறப்பு விகிதம்
ஐ.நா. அமைப்பின் தகவலின் படி, இந்தியாவில் அதிக பெண் இறப்புகள் நடந்து வருதாகவும், இது 1,000 பெண் சிசுக்களில் 13.5 சிசுக்கள் இறக்கிறார்கள் என்றும், இது 5 வயதுக்கு குறைவான பெண்களின் ஒன்பது இறப்புகளில் ஒன்று முந்தைய பாலின தேர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது.
குறையும் ஆண்-பெண் விகிதம்
ஆண்-பெண் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. திருமணத்துக்கு காத்திருக்கும் ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்காமல், திருமணம் தள்ளிப்போகிறது. மணப்பெண்கள் தட்டுப்பாட்டால், குழந்தை திருமணங்கள் பெருக வாய்ப்புள்ளது.
50 வயதை கடந்தும் திருமணம் ஆகாத ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் இந்த ஆண்கள் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வங்கிகளில் வரும் 4ம் தேதி வரை வாடிக்கையாளர் சேவை ரத்து!
மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்! -உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல்!
Share your comments