1. Blogs

ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் இனி சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல காலம் தான்!

R. Balakrishnan
R. Balakrishnan
Senior citizens

ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை உயர்த்தி வருகிறது. இதனால் சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். வட்டி விகிதம் உயர்வால் சினியர் சிட்டிசன்களுக்கு என்ன லாபம் கிடைக்கும்? 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கியபோது ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 4% ஆகக் குறைத்தது. இதன் விளைவாக வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் பயங்கரமாக குறைந்தன. இதனால் சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்தது.

ரெப்போ வட்டி (Repo Interest)

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யாமல் 4% ஆகவே வைத்திருந்தது ரிசர்வ் வங்கி. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இதே நிலைதான். குறிப்பாக, பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியதால் கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து சர்வதேச அளவில் பணவீக்கம் பயங்கர வேகத்தில் உயர்ந்தது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பணவீக்கம் அதிகரித்தது.

இதனால், மே மாதம் ரிசர்வ் வங்கி அவசர கூட்டத்தை கூட்டி ரெப்போ வட்டியை 4.40% ஆக உயர்த்தியது. இதன்பின்பு ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி பணக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி 4.90% ஆக உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்திக்கொண்டே வந்தன.
இந்நிலையில், இம்மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி 5.40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தி வருகின்றன. வரும் நாட்களில் வட்டி விகிதம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களை பொறுத்தவரை பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே பிரதானம். எனவே, பாதுகாப்பில்லாத ரிஸ்க்கான முதலீடுகளை தவிர்த்துவிடுவார்கள்.

ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்கின்றனர்.
ஏனெனில், ஃபிக்சட் டெபாசிட்டில் பணத்துக்கு ஆபத்து இல்லை; சொல்லப்பட்ட வட்டி விகிதத்தில் வருமானம் வரும். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை தொடர்ந்து உயர்த்துவதால் கடன் வாங்கி EMI செலுத்துவோருக்கு செலவு அதிகரிக்கும். ஆனாலும், சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக வட்டி விகிதம் கிடைப்பதால் பெரிதும் பயனடைவார்கள்.

மேலும் படிக்க

200 ரூபாய் முதலீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் பென்சன் திட்டம்!

2 ஆண்டுகள் சம்பளம் வாங்காத முகேஷ் அம்பானி: காரணம் இது தானாம்!

English Summary: Now is a good time for senior citizens due to RBI action! Published on: 10 August 2022, 08:11 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.