எதிர்கால ஓய்வூதியத்துக்கு திட்டமிடும் சிறு வியாபாரிகளுக்காகவே மத்திய அரசு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு வியாபாரிகளின் ஓய்வுக்காலத்தில் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த திட்டம் உதவுகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பென்சன் திட்டம் (Pension Scheme)
2019-20 பட்ஜெட் அறிவிப்பின்படி ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு கீழ் விற்றுமுதல் (Turnover) ஈட்டும் வியாபாரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் மத்திய அரசு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது. 18 முதல் 40 வயது வரம்பிலான வியாபாரிகள் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். எனினும், EPFO, ESIC, NPS, PM-SYM ஆகிய திட்டங்களின் பயனாளிகளும், வருமான வரி செலுத்துவோரு இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைய முடியாது என அரசு தெரிவித்துள்ளது.
சிறு வியாபாரிகள் (Small Traders)
வியாபாரிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 50% பங்களிப்பு தொகையை வியாபாரி செலுத்த வேண்டும். அதற்கு நிகரான தொகையை மத்திய அரசு செலுத்தும். பயனாளி 60 வயதை தொட்டபின் அவருக்கு மாதம் 3000 ரூபாய் பென்சன் தொகை உத்தரவாதமாக கிடைக்கும். வியாபாரிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைய விரும்புவோர் அருகில் உள்ள பொது சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது, சுயமாகவே https://maandhan.in/ இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
2023 மார்ச் 14ஆம் தேதி நிலவரப்படி இந்த ஓய்வூதிய திட்டத்தில் 52,396 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
வட்டி உயர்வுக்கு இனி வாய்ப்பில்லை: ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவு!
Share your comments