மற்றவர்களின் கவனத்தை நம்வசம் ஈர்க்க பலரும் முயற்சி செய்கிறார்கள். அதிலும் அனைவர் கைகளிலும் உள்ள ஆன்ராய்டு ஃபோனில் டிக்டாக் வீடியோக்கள் மூலம் இடம்பெற இளைய தலைமுறையிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டியில், மற்றவர்களைக் கவர்ந்து, Likeகளைக் குவிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் இலக்கு.
அதேநேரத்தில் இலக்கை அடைய, ஆபாசம், வக்கிரம் என பலவித ஆயுதங்களைக் கையில் எடுக்கிறார்கள். இருப்பினும், வித்தியாசமான வீடியோவை வெளியிட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க, இங்கு பெண் ஒருவர், தனது இறுதிச்சடங்கின் இடம்பெற வேண்டிய அம்சங்களை ஆசையாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது தன் இறுதி சடங்கு எப்படி நடக்க வேண்டும் என 9 விதிமுறைகளைக் குறிப்பிட்டு அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. @iamjist என்ற பெயரை கொண்ட அவர் தான் இறந்த அன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என விசித்திரமான 9 விதிமுறைகளை வகுத்துள்ளார்.
விதிமுறைகள் (Rules)
-
இறுதி சடங்கில் கலந்து கொள்பவர்கள், அவருடன் எடுத்த புகைப்படத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
-
கல்லறையில் புதைக்கும் முன்பு, எனக்கு அழகாக மேக்கப், லிப்ஸ்டிக், மஸ்காரா போட்டு அழகு படுத்த வேண்டும்.
-
புதைக்கப்பட்ட பின்பு, கல்லறை மீது படுத்து யாரும் அழ கூடாது.
-
இறுதி சடங்கில் கலந்து கொள்பவர்கள் தங்கள் வாய் நாற்றமடிக்காமல் இருக்க சுவிங்கம் மெல்ல வேண்டும்.
-
இவரது இறுதி சடங்கில் இவர் குறித்து யார் பேசினாலும் 5 நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.
-
இறுதி சடங்கில் கடந்து கொள்பவர்கள் கருப்பு நிற ஆடை அணியத் தடை.
-
இ றுதி சடங்கில் பங்கேற்பவர்களுக்கு சிக்கன், சீஸ் மக்ரூனி என வித விதமான உணவுகள் பரிமாறப்பட வேண்டும்.
-
இறுதி சடங்கின் போது பார் செட்டப் அமைக்கப்பட்ட வந்திருப்பவர்கள் அனைவரும் குறைந்தது 2 லார்ஜ் அடிக்க வேண்டுமாம்.
-
குறைவாக குடிப்பவர்கள் உடனடியாக வீட்டிற்கு கிளம்பலாம்.
-
இறுதி சடங்கில் கலந்து கொள்பவர்கள் அதிகபட்சம் 20 நிமிடங்கள் தான் அழ வேண்டும்.
அடக்கொடுமையே, மக்கள் இப்படியும் இருக்கிறார்களே!
மேலும் படிக்க...
6 மாதம்தான்- இல்லையேல், ரேஷன் Card ரத்து!
வெந்நீரில் 10 நிமிடம் ஊறிய வெந்தயம்- Sugar Control நிச்சயம் சாத்தியம்!
Share your comments