நலிவடைந்த பழங்குடியின மக்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் சமூகத்தில் அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த இயலும் என பேராசிரியர் மோனி மாடசுவாமி தெரிவித்துள்ளார்.
தேசிய தகவல் மையத்தின் டைரக்டர் ஜெனரலாகவும், 1995-ல் வேளாண் தகவல் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பு வகித்த பேராசிரியர் மோனி மாடசுவாமி ஸ்மார்ட் பழங்குடி விவசாயம் திட்டத்தை முன்னெடுப்பதில் பெரும் பங்காற்றி வருகிறார். பழங்குடியின மக்களை விவசாயத்துறையில் ஈடுபடுத்துவதன் அவசியத்தை பின்வருமாறு விளக்குகிறார்.
முதலாவதாக, இந்தியாவின் மோசமான ஆரோக்கியம். விவசாயிகளும் பூச்சிக்கொல்லிகள் விளைவிக்கும் தீங்கினைப் பற்றி அறிந்திருந்தாலும், அதனை தவிர்க்க முடியாமல் உள்ளனர். "மண்ணின் தரம் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இவற்றிலிருந்து கிடைக்கும் காய்கறிகள், இறைச்சி, முட்டைகளை நாம் உண்ணும் போது பாதிப்பு நமக்கும் ஏற்படுகிறது” என்கிறார் மோனி. "மண்ணில் உள்ள தாதுக்கள் மனித உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
பசுமைப் புரட்சி 1970-களில் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்தது, இருப்பினும், மண்ணின் நிலை பின்னர் ஒரு பெரிய அளவிற்கு அழிக்கப்பட்டது.
திட்டம் என்ன?
” இந்தியாவில் குறைந்தபட்சம் 1.45 லட்சம் பழங்குடி கிராமங்கள் உள்ளன, மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள். அவர்கள் விவசாயம் செய்கிறார்கள், ஆனால் மதிப்பு கூட்டல் முறையில் இன்னும் பெரும்பாலனோர் மேம்படவில்லை. இந்த பழங்குடியின கிராமங்களை 'மாதிரி கிராமங்களாக' மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ், பழங்குடியினர் விவகார அமைச்சகம் அதன் வளர்ச்சிக்கான நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது. புதிய திட்டம் - பிரதான் மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா - இந்தியா முழுவதும் பல கட்டங்களில் தொடங்கப்பட உள்ள இத்திட்டத்தில் முதல் கட்டமாக 36,428 கிராமங்கள் அடங்கும், இதில் குறைந்தது 50% பழங்குடியினர் உள்ளனர்” என்றார்.
இந்தியாவில் உள்ள பழங்குடியினர் என்ன பெறுவார்கள்?
UN-FAO அறிக்கை (2014) படி, "கிராமப்புற இளைஞர்கள் உணவு பாதுகாப்பின் எதிர்காலம்." பழங்குடியின இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைவது மட்டுமல்லாமல் தொழில்நுட்பம், தன்னம்பிக்கை மற்றும் சிறந்த சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் கற்றுக்கொள்கிறார்கள்” என மோனி கருதுகிறார். மேலும் விவசாயத்தில் டிஜிட்டல் மாற்றத்தை எளிதாக்குவதற்கு ஒரு கிராம பஞ்சாயத்துக்கு ஒரு அக்ரிடெக் ஸ்டார்ட்அப் பொருத்தப்பட உள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 10 முதல் 15 பழங்குடியின கிராமங்களில் ஸ்மார்ட் ஃபார்மிங் குறித்த முன்னோடி ஆய்வு நடத்தப்படும்.
சமூகத்தில் பழங்குடியினர் மக்கள் மீது மோசமான பார்வை இருப்பினும் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. பழங்குடியின மக்களும் தங்களது திறமையினால் மிகப்பெரிய பொறுப்பினை வகிக்கிறார்கள். ஒடிசாவின் ராய்ராங்பூரின் பைடாபோசி பகுதியில் உள்ள உபர்பேடா கிராமத்தில் சந்தாலி குடும்பத்தில் பிறந்த நமது ஜனாதிபதி திரௌபதி முர்மு இதற்கு சிறந்த உதாரணம்.
இது தவிர, காஷ்மீரின் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (SKUASTK) பழங்குடியினருடன் இணைந்து ஸ்மார்ட் பழங்குடி விவசாயத் திட்ட முன்முயற்சியில் இணைந்து பணியாற்றுவதில் சிறப்பு ஆர்வம் காட்டியுள்ளது,” என்றார்.
ஸ்மார்ட் பழங்குடி விவசாயம் எவ்வாறு செயல்படும்?
மதிப்புமிக்க பழங்குடியின விவசாயத்தின் அவசியத்தை டாக்டர். அசோக் தல்வாயின் 2022 அறிக்கையில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான பரிந்துரை குழுவில் பேராசிரியர் மோனியும் அங்கம் வகித்தார். தொகுதி 11 மற்றும் தொகுதி 12B துணைக்குழுக்களுக்கு அவர் தலைமை தாங்கினார். தொகுதி-12B விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் (ஸ்மார்ட் பாசன விவசாயம், ஸ்மார்ட் மானாவாரி விவசாயம் மற்றும் ஸ்மார்ட் பழங்குடியினர் விவசாயம்) பற்றியது.
இந்தியா ஒரு விவசாயப் பொருளாதாரமாக இருக்கும்போது, “பழங்குடியினர் அந்த பந்தயத்தில் பின்தங்கி விடக்கூடாது என்பதற்காக அவர்களை ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதும், அவர்களுக்கு உதவுவதும் நமது பொறுப்பு,'' என்றார்.
pic courtesy: krishijagran/ prof.mony
மேலும் காண்க:
Share your comments