கொரோனா நெருக்கடி நமக்கு சொல்லித் தந்த பாடங்களில், உடல் தூய்மையும், வீட்டின் தூய்மையும் ஒன்று. அதிலும் இல்லத்தின் உள்புறத் தூய்மையை பொறுத்தவரை, பூச்சி, புழுக்கள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதுதான் மிக மிக முக்கியம். அதற்காகத்தான் வீட்டு வாசலில் மஞ்சள் வைப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். அதேநேரத்தில் பூஜையின் ஒரு பகுதியாக, சாம்பிராணியைப் பயன்படுத்துவது தொற்றுக் கிருமிகளை வீட்டிற்குள் அனுமதிக்காது.
இந்த தொழிலில் முன்பெல்லாம், பெரிய பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தினர். ஆனால் இப்போது இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே அனைவரும் செய்யலாம். சுலபமான முறையில் செய்யக்கூடிய கப் சாம்பிராணி இயந்திரம் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் கப் சாம்பிராணிகளை கருப்பு வண்ணங்களில் மட்டுமே விற்பனை செய்கிறார்கள். எனவே வட மாநிலத்தவர்களைப் போல நாமும் பல வண்ணங்களை செய்து கூடுதல் நறுமணத்துடன் விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம்.
கப் சாம்பிராணி மூலப்பொருள்:
-
கரித்துகள்கள்
-
ஜிகட்
-
மரத்தூள்
-
சாம்பிராணி
-
வாசனை திரவியம்
-
yy கெமிக்கல்
மொத்த செலவு ரூ.10. இந்த தொழிலில் ஒரு பாக்கெட்டிற்கு 12 கப் சாம்பிராணி பீசஸ் வைக்கலாம். ஒரு பாக்கெட்டிற்கு இந்த சாம்பிராணி செய்ய மொத்த செலவுகள் ரூ. 10/- மட்டுமே ஆகும். சாம்பிராணி தயாரிப்பதற்கான இயந்திரம் மிசின் இந்தியாமார்ட் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கிடைக்கிறது. சுயமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் யோசிக்கலாமல் இந்த இயந்திரத்தை வாங்கி தொழிலை துவங்கலாம்.
இயந்திரம் விலை:
இந்த கப் சாம்பிராணி இயந்திரம் குறைந்தபட்சம் ரூ. 20,000 ஆகும். அத்துடன் அட்டை பெட்டி உள்ளிட்ட இதர செலவுகளைச் சேர்த்து ரூ. 30,000/- ஆகும். இந்த தொழில் துவங்க மொத்தமாக ரூ.50,000/- இருந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே தாராளமாக இந்த தொழிலை துவங்கலாம்.
இடம்
இந்த இயந்திரத்தை வைப்பதற்கு வீட்டின் சிறிய இடம் போதுமானது.
கப் சாம்பிராணி தொழில் செய்யும் முறை:
முதலில் மூலப்பொருள்கள் அனைத்தையும் காயவைத்து கொள்ளவும். அடுத்து கீழே தட்டில் அந்த கரித்துகள்களை வைத்துக்கொள்ளவும். துகள்களை அந்த ஓட்டையின் உள் செலுத்தி அந்த கை பிடியினை ஒரு முறை சுற்றி அழுத்திவிட வேண்டும். அழுத்தி விட்ட பிறகு அந்த மிஷினில் கப் சாம்பிராணியானது ரெடி ஆகிவிடும்.
லாபம்:
இந்த கப் சாம்பிராணி தொழிலில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 100 பெட்டிகள் ரெடி செய்கிறீர்கள் என்றால் 1 பெட்டிக்கு சராசரியாக ரூ. 10/- லாபம் கிடைக்கும். இதன்மூலம் தினமும் ரூ. 1,000/- லாபம் கிடைக்கக்கூடிய தொழில்.
விற்பனை செய்யக்கூடிய இடம்:
சாம்பிராணியை தரமாக செய்தீர்களேயானால், பெரிய கம்பெனிகள், கோவில் வாசலில் முன் இருக்கும் கடைகள், பூஜை பொருள்கள் மொத்தமாக விற்பனை செய்யும் இடங்களுக்கு நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.
ஆன்லைன் விற்பனை:
கடைகளில் இந்த கப் சாம்பிராணியை ரூ. 20/- முதல் 30/- வரையிலும் விற்பனை செய்கிறார்கள். இந்த தொழில் மூலம் வாடிக்கையாளர்களை கவர செய்வதற்கு பல வண்ண கலவைகள் மூலம் விற்பனை செய்து வந்தால் இன்னும் அதிக லாபம் பெறலாம். கடைகளில் மட்டுமல்லாமல் ஆன்லைன் ஷாப்பிங் மூலமாகவும் கப் சாம்பிராணியை விற்பனை செய்யலாம்.
மூலப்பொருள் கிடைக்கும் இடம்:
இந்த தொழில் துவங்க மூலப்பொருளானது சென்னை, திருச்சி(பேருந்து நிலையம் அருகில்), மதுரை(மீனாட்சி அம்மன் கோவில் பின்புறம்), சேலம்(பழைய பேருந்து நிலையம் அருகில் கணக்கர் தெரு) இந்த பகுதிகளில் கப் சாம்பிராணி செய்வதற்கான மூலப்பொருள்கள் கிடைக்கின்றன.
இந்த மூலப்பொருளை வாங்கி நீங்களே விற்பனை செய்தால் இன்னும் அதிக லாபம் பெறலாம். அதாவது கடைகளில் சென்று கொடுக்கும் போது கடைக்கார்களுக்கு நீங்கள் 15 ரூபாய்க்கு கொடுத்தால் அவர்கள் 20 ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள். இதில் உங்களுக்கு 5 ருபாய் நஷ்டம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு நீங்களே சென்று விற்பனை செய்து வந்தால் அதிக லாபம் காணலாம்.
இது போன்று வித விதமான வண்ண கலர்களில் ரெடி செய்து விற்பனை செய்தால் வாடிக்கையாளர்களின் மனதில் ஆர்வம் தூண்டும். ஆன்லைனில் இந்த ஒரு பெட்டி ரூ.100 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நாமும் வட மாநிலம் போல புது விதமாக விற்பனை செய்தால் அதிகமாக லாபம் அடையலாம்.

Read More...
பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு! மகிழ்ச்சியில் விவசாயிகள்!
ஃப்ரிட்ஜில் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் வைக்கலாம்?
Share your comments