தினமும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில், பாசிப் பருப்பில் அடங்கியுள்ள புரதச் சத்து நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
புரதச் சத்து
உயரம் 150 செ.மீ., இருந்தால், உடல் எடை 50 கிலோவாக இருக்க வேண்டும். 1 கிலோவுக்கு 1 கிராம் என்ற அளவில், 50 கிராம் புரதம் (Nutrients) தினமும் சாப்பிட வேண்டும். ஆனால், 10ல் ஒன்பது பேர் சராசரியாக 20 - 25 கிராம் புரதம் தான் சாப்பிடுகின்றனர். தினமும் சாப்பிடும் பாசிப் பருப்பு, சோயா, கொண்டைக்கடலை உட்பட 16 வகையான பருப்பு வகைகள், பால், தயிர், முட்டை, மீன், சிக்கன் போன்றவற்றில் பாதுகாப்பான புரதம் உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நேரில் சென்று நடத்திய ஆய்வில், புரத உணவு பற்றி தெரிந்திருக்கவில்லை.
புரதச்சத்து குறைபாடு
வளர் இளம்பருவத்திற்கு முந்தைய குழந்தை பருவத்தில் உடல் உறுப்புகளின் வளர்ச்சி, 90 சதவீதம் முழுமையடைந்து விடும். போதுமான புரதம் இல்லாவிட்டால் உயரம் மட்டுமல்ல, உடல் உள் உறுப்புகளின் வளர்ச்சியும் சரியாக இருக்காது.
கருப்பை சிறிதாக இருப்பது, கருக்குழாய் வளர்ச்சி குறைவது, இளம் வயதிலேயே மூட்டுகளில் பிரச்னை இவற்றிற்கு ஒரு பிரதான காரணம், புரதச்சத்து குறைபாடு. செயற்கையாக 'டின்'களில் விற்கப்படும் புரத உணவை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க
Share your comments