1. Blogs

மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை: கடைசி தேதி உள்ளே!

R. Balakrishnan
R. Balakrishnan
Scholarships for students

இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா படிக்கும் மாணவிகளுக்கு பிரகதி உதவித்தொகை (Scholarships) வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பு மாணவிகளுக்கான தகுதிகள்:

  • தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்பில் முதல் ஆண்டு படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவிகள் அல்லது ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், &'லேட்ரல் என்ட்ரி’ முறையில் இரண்டாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவிகள்.
  • ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் தகுதியுடையவர்கள்.
  • குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை:

ஆண்டுக்கு மொத்தம் 5,000 மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை விபரம்:

ஆண்டுக்கு 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டில் சேர்க்கை பெற்ற மாணவிகளுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கும், இரண்டாம் ஆண்டில் சேர்க்கைப் பெற்ற மாணவிகளுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

’நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல்’ (National Scholarship Portal) வாயிலாக உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

10ம் மற்றும் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். இந்திய அரசின் அறிவிப்பின்படி, இட ஒதுக்கீடு உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு, ஆண்டுதோறும் டி.பி.டி., முறையில் உதவித்தொகை வழங்கப்படும்.

டிப்ளமா மாணவிகள்:

உதவித்தொகை எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை, குடும்ப வருமானம் அனைத்தும் பட்டப்படிப்பு மாணவிகளுக்கான தகுதியே டிப்ளமா மாணவிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையை பொருத்தவரை, 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30
விபரங்களுக்கு: https://scholarships.gov.in/

மேலும் படிக்க

இல்லம் தேடி கல்வி: தமிழக அரசின் புதிய திட்டம்!

குழந்தைகளின் வருங்காலத்திற்கு எப்படியெல்லாம் முதலீடு செய்யலாம்?

English Summary: Scholarships for students: Last date inside! Published on: 20 October 2021, 06:29 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.