வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கான வட்டி விகித குறைப்புக்கு மத்திய அரசு இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் பிஎஃப் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்ற மார்ச் மாதத் தொடக்கத்தில் பிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. உறுப்பினர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது பிஎஃப் உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு பிஎஃப் வட்டி இந்த அளவுக்குக் குறைக்கப்படுவது இதுவே முதல் முறை.
இந்த பிஎஃப் வட்டி குறைப்புக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2021-22 நிதியாண்டுக்கு 8.1 சதவீத வட்டி வழங்கப்படும்.
இந்த வட்டி விகிதத்துக்கு மத்திய அறங்காவலர் வாரியம் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கான இறுதி ஒப்புதல் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
8.65%
முன்னதாக, 2020-21 நிதியாண்டில் பிஎஃப் வட்டி 8.5 சதவீதமாகவும், 2018-19ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாகவும், 2017-18ஆம் ஆண்டில் 8.55 சதவீதமாகவும், 2016-17ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாகவும் பிஎஃப் வட்டி நடைமுறையில் இருந்தது.
8.1 சதவீத வட்டி என்பது மிகவும் குறைவு என்று பிஎஃப் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
குறைவு அல்ல
இருந்தாலும் இது குறைவான வட்டி என்று கூறமுடியாது எனவும், மற்ற பென்சன் அமைப்புகள் வழங்கும் வட்டியை விட இது அதிகம்தான் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். வட்டித் தொகையைப் பொறுத்தவரையில், பிஎஃப் கணக்குதாரர்களுக்கு வழக்கத்தை விட விரைவாக இந்த ஆண்டு வட்டி தொகை செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments