மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 8500 எம்டிஎஸ் (MTS - Multi tasking Staff) காலிப் பணியிடங்கள் உள்ளதாக SSC - Staff selection Commission அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தப் பணியிடங்களை நிரப்பும் பொருட்ட எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.
மத்திர அரசுப் பணியிடங்களை (கிளாக் பணியிடங்களை)SSC நிரப்பி வருகிறது. சமீபத்தில் மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள 8500 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணபிக்கலாம்.
-
வேலை: Multi Tasking Staff (MTS)
-
மொத்த காலிப் பணியிடங்கள்: 8.500
-
சம்பளம்: ஏழாவது சம்பளக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
-
வயதுவரம்பு: 01.01.2021 தேதியின்படி 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
-
தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
தேர்வு முறை: SSC நடத்து எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் வாயிலாகவும் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
-
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://ssc.nic.in. என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2021
மேலும் எழுத்துத் தேர்வு, வயதுவரம்பு சலுகை போன்ற விரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_05022021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்லலாம்.
மேலும் படிக்க...
காலாவதியாகி விட்ட பாலிஸியை இனி எளிதில் புதுப்பிக்கலாம்! சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது LIC
Share your comments