மாத சம்பளம் வாங்குபவர்கள் சிறு தொகையை முதலீடு (Investment) செய்து பெரிய லாபத்தை ஈட்டும் அளவுக்கு சிறந்த திட்டங்கள் மற்றும் பாதுகாப்பான திட்டங்கள் பற்றி இங்கு பார்க்கலாம். கொரோனா (Corona) வந்த பிறகு அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் சேமிப்பின் முக்கியத்துவம் தெரிந்துள்ளது.
மாதாந்திர வருமானத் திட்டம்
வங்கிகளில் நிலையான வைப்புத் தொகை திட்டத்தைப் போல, தபால் நிலையங்களில் (Post office) மாதாந்திர வருமானத் திட்டம் நல்ல லாபம் தருகின்றன. ஐந்தே ஆண்டுகளில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. இத்திட்டத்துக்கான வட்டி விகிதத்தைப் (Interest Rate) பொறுத்தவரையில், ஆண்டுக்கு 6.6 சதவீத வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக நீங்கள் ரூ.4.50 லட்சம் சேமிக்கலாம். இணைப்புக் கணக்காக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம். மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு தபால் நிலையத்துக்கு மாற்றலாம். முதலீட்டாளர்கள் (Investors) எந்தவொரு தபால் நிலையத்திலும் அதிகபட்ச முதலீட்டு வரம்புக்கு உட்பட்டு கணக்குகளைத் திறக்க முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்!
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கும் மிகச் சிறந்த சேமிப்புத் (Savings) திட்டமாகும். ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆனால் 60 வயதுக்கு குறைவான ஒரு நபருக்கு 5 வருட காலத்திற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் திறக்கப்படலாம். ஆனால் மொத்த வரம்பு ரூ.15 லட்சமாக இருக்க வேண்டும். இந்தக் கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகு கணக்கை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். தற்போது இத்திட்டத்தின் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதமாக உள்ளது.
பிஎம் வயா வந்தனா யோஜனா!
பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டம் 2023 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மூத்த குடிமக்களுக்குப் பெரிதும் உதவும். ஏனெனில் இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான வயது 60 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, ஒரு வருடத்தில் விற்கப்படும் பாலிசிகளுக்கான (Policy) உத்தரவாத ஓய்வூதிய விகிதங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் மத்திய நிதியமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்படும். முதல் நிதியாண்டில், அதாவது 2021 மார்ச் 31 வரை இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7.40 சதவீத உறுதியான ஓய்வூதியத்தை வழங்கும்.
நிலையான வைப்புத் தொகை!
நாட்டிலுள்ள பெரும்பாலான வங்கிகள் முதியோருக்கான நிலையான வைப்புத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இதில் மற்றவர்களை விட 0.50 சதவீதம் கூடுதலான வட்டியை முதியோர்கள் பெறலாம். சில தனியார் வங்கிகள் 1 சதவீதம் வரையில் கூடுதல் வட்டி (Extra interest) தருகின்றன. 7 நாள் முதல் 10 வருடங்கள் வரையில் இத்திட்டங்களில் சேமிக்கலாம். சில தனியார் (Private) மற்றும் சிறு நிதி நிறுவனங்களில் 8 சதவீதம் வரையில் வட்டி கிடைக்கிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!
Share your comments