பென்சனர்கள் மற்றும் முதியோருக்காக தனி இணையதளம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார். இந்த இணையதளம் பென்சனர்களுடன் தொடர்பில் இருக்கும் எனவும் அவர்களின் கருத்துகள், குறைகளை கேட்க வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையதளம் (Website)
பென்சன் விதிமுறைகளை திருத்துவதற்கான நிலைக் குழுவின் 32ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பென்சனர் சங்கங்கள் பங்கேற்றன. இந்நிகழ்வில் மத்திய பணியாளர் மற்றும் பென்சன் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், “பென்சனர்கள் பயன்பெறுவதற்காக தனி இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். பென்சன் வாங்குவோர் தங்கள் குறைகளை டிஜிட்டல் வழியில் தெரிவிக்கவும், அதிகாரிகளை சந்திக்காமல் குறைகளை தீர்த்துக்கொள்ளவும் இந்த பென்சன் இணையதளம் உதவும்.
பென்சன் வழங்குவது தொடர்பான அனைத்து அமைச்சகங்களும் இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். எல்லா குறைகளும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழ் திட்டம் 2020 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் 3,08,625 வாழ்வுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், 100 நகரங்களில் பென்சனரின் வீட்டுக்கே வந்து வாழ்வுச் சான்றிதழ் பெறும் வசதியை பொதுத்துறை வங்கிகள் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
PF உறுப்பினர்களே: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்!
பான் - ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா? இதைச் செய்து உடனே இணைக்கலாம்!
Share your comments