கடந்த, 2018ல், சூரியன் குறித்து ஆய்வு செய்ய 'பார்க்கர்' என்ற விண்கலத்தை நாசா (NASA) அனுப்பியது. கடந்த ஏப்ரலில் பார்க்கர், சூரியனுக்கு நெருக்கமாக வந்தது.
பார்க்கர்
அப்போது 'கொரோனா' எனப்படும் சூரியனின் வெளிப்புற வெப்ப வாயு மண்டலத்திற்குள் பார்க்கர் நுழைந்து வெளியேறியது. அதுபோல, தற்போது கொரோனா பகுதியில் மூன்று முறை பார்க்கர் நுழைந்து வெளிவந்துள்ளது.
இது குறித்து மிச்சிகன் பல்கலை விஞ்ஞானி ஜஸ்டின் காஸ்பர் கூறியதாவது:
பார்க்கர் மிக வேகமாக சூரியனை சுற்றுகிறது.
சாதனை (Record)
தற்போது, சூரியனின் மையப் பகுதியில் இருந்து, 1.30 கோடி கி.மீ., துாரத்தில் பார்க்கர் உள்ளது. வினாடிக்கு, 100 கி.மீ., வேகத்தில் சுற்றும் பார்க்கர், மூன்று முறை சூரியனின் வெப்ப வாயு மண்டலத்திற்குள் நுழைந்து வெளிவந்துள்ளது.
இது ஒருவகையில் சூரியனை தொட்டது போன்றது தான். முதன் முறையாக இந்த சாதனை
நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments