1. வாழ்வும் நலமும்

பெண் தொழில் அதிபராக விருப்பமா? வங்கிக்கடனுதவித் திட்டங்கள் இதோ!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Want to be a woman entrepreneur? Here are the bank loan assistance schemes!

Credit : Score.org

எத்தனை காலம் மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்தாலும்,சுயதொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு இருக்கும்.

எனினும் இந்த ஆசை சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அந்த சிலர் பட்டியலில் நீங்களும் சேர வேண்டுமா? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குதான். தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக மகளிருக்கு ஏராளமான கடன் திட்டங்களை மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் கடன் வழங்கப்படுகிறது. சுயதொழில் மற்றும் ஸ்டார்ட்-ஆப் (Start- up) என்ற தொடக்க நிலை நிறுவனங்கள் முதல் மகளிர் ஈடுபட்டு வரும் அனைத்து தொழில் முனைவோர் மற்றும் வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் நிதி உதவி களை வழங்கிய வருகிறது

முத்ரா கடன் திட்டம் (Mudra loan scheme)

  • இந்த அமைப்பின் கீழ் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை ஆகிய பிரிவுகளின் கீழ் ரூ.50,000 முதல் ரூ.10லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

  • இந்தக் கடன் சலுகைத் தனியார் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கிடைக்கும்.

  • அவ்வாறு பெறும் கடன் தொகையை, 11ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்த்ரி சக்தி (Feminine power)

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்த கடன் சலுகையை வழங்குகிறது
இந்தக் கடன் தொகை ரூபாய் 2லட்சத்திற்கு அதிகமாக இருந்தால்
வட்டி விகிதத்தில்.0.5சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும். இந்தக் கடன் சலுகையைப் பெறுவோர் அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

சென்ட் கல்யாணி

  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) இந்தக் கடன் சலுகையை வழங்குகிறது.

  • அதிக பட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வழங்கப் படுகிறது. இதற்கு கடனுக்குக்கான செயல் ஆக்க கட்டணம் கிடையாது.

  • எவ்வித செக்குரிட்டியும் தேவையில்லை.

உத்யோகினி

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிகள் இந்த கடன் சலுகையை வழங்குகிறது.
18வயது முதல் 45வயது வரை உட் பட்ட மகளிருக்கு மட்டும் கடன் கிடைக்கும்.
வேளாண் மற்றும் சிறு குறு வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் மகளிர் இந்தக் கடனைப் பெறத் தகுதி யானவர்கள்.

தொழில் மேம்பாட்டு வங்கி (Business Development Bank)

  • இந்தியா சிறு தொழில் மேம்பாட்டு வங்கி, ஸ்டாண்ட் ஆப் இந்தியா என்ற இந்தக் கடன் திட்டத்தை வழங்குகிறது.

  • ரூ.10லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை வழங்கப்படும்.

தேனா சக்தி திட்டம்
இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு
ரூபாய் 50ஆயிரம் முதல் இருபது லட்சம் வரை வழங்கப்படும்.


அண்ணபூர்ணா

  • இந்த கடன் சலுகையை மைசூர் மாநில வங்கி வழங்குகிறது. மொத்தம் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படும்.

  • பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிருக்கு இந்தக் கடன் கிடைக்கும்.

தகவல்

அக்ரி சு.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

9443570289

மேலும் படிக்க...

தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!

வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!

English Summary: Want to be a woman entrepreneur? Here are the bank loan assistance schemes!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.