SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல விதமான கணக்குகள் தொடங்கும் வாய்ப்பை வழங்குகிறது. சேமிப்புக் கணக்கு (Savings Account), நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit), தொடர் வைப்பு நிதி (Recurring Deposit) என அனைவருக்கும் பரீட்சியமான வங்கி கணக்குகள் தவிர, சேவிங்ஸ் பிளஸ் (Savings Plus) என்ற கணக்கும் ஸ்டேட் வங்கியில் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.
வங்கி கணக்குகள்
பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை (Multi Option Deposit) இந்த வங்கிக் கணக்கின் மூலம் வழங்குவதால் இது 'Savings Plus Account' என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேரும் பணம் (குறைந்தபட்சம் ரூ.1,000) நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) போன்ற பிற முதலீடுகளுக்கு தானாகவே மாற்றப்படும்.
சேவிங்ஸ் பிளஸ் கணக்கை தொடங்குவது எப்படி?
சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் தகுதி உடைய அனைவரும் சேவிங்ஸ் பிளஸ் கணக்கையும் தொடங்க முடியும். பிற முதலீடுகளுக்கு பணத்தை மாற்றுவதற்கு குறைந்தபட்சம் ரூ.35,000 மேல் கணக்கில் பணம் சேர வேண்டும். ரூ.35,000க்கு அதிகமாக சேரும் பணம் ஆயிரம், ஆயிரம் ரூபாய்களாக மற்ற முதலீட்டுக்கு மாற்றம் செய்யப்படும்.
குறைந்தபட்ச இருப்பு தொகை
-
மெட்ரோ நகரங்களில் சேவிங்ஸ் பிளஸ் கணக்கு வைத்திருப்பவர்களின் குறைந்தபட்ச இருப்புத் தொகையின் மாத சராசரி (Average Minimum Balance) ரூ.3000 இருக்க வேண்டும்.
-
புறநகர்களில் இந்தக் கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ரூ.2000.
-
கிராமப்புறங்களில் இந்தக் கணக்குக்கு ரூ.1000 குறைந்தபட்ச இருப்புத்தொகை கட்டாயம் இருக்க வேண்டும்
வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
சாதாரண சேமிப்புக் கணக்கிற்கு கிடைக்கும் அதே அளவு வட்டியே இந்த சேவிங்ஸ் பிளஸ் கணக்குக்கும் கிடைக்கும். மற்ற முதலீடுகளின் அளவு குறைந்தபட்சம் ரூ.10,000ஆக இருக்க வேண்டும். இந்த தொகை ஆயிரம் ரூபாய்களாக மாற்றப்படும். இதன் முதலீட்டு காலம் ஒன்று முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
மேலும் படிக்க...
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமா? 59 நிமிடங்களில் கடன் பெறலாம்!!
விவசாயிகளா நீங்கள்..! வட்டியே இல்லாமல் கடன் வாங்கலாம்!
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..! நாளொன்றுக்கு ரூ.60 வீதம் மாதத்திற்கு ரூ.1,800/- சேமித்தால் போதும்!
Share your comments