ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மாட்டுச் சாணத்தை உண்ணும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மாட்டுச் சாணம் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பதையும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விவசாயத்தில் மிகச் சிறந்த இயற்கை உரமாக பயன்படும் மாட்டுச் சாணம், மனித உடலுக்கும் ஏற்றது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசுமாட்டின் சிறுநீர் மற்றும் சாணியில் மனம், உடல் மற்றும் ஆத்மாவை சுத்தம் செய்யும் அனைத்துவிதமான நல் விசயங்களும் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சிறுநீர் குடித்து, சாணியை உட்கொண்டுள்ளார்.
மாட்டுச்சாணம் (Cow Dung)
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கார்னலைச் சேர்ந்த டாக்டர் மனோஜ் மித்தல் என்பவர் கையில் மாட்டுச் சாணத்தினை (Cow Dung) வைத்த வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். பஞ்சகாவ்யா என்ற விசயத்தை மாடு மனிதர்களுக்கு தரும் என்று கூறி சாணத்தை உட்கொண்டுள்ளார்.
தன்னுடைய தாய் விரதத்தை முடிக்கவும் கூட இப்படியாக சாணம் மற்றும் சிறுநீரை வழக்கமாக உட்கொள்வார் என்றும் கூறியுள்ளார். சுகப்பிரசவம் நடைபெற பெண்கள் கட்டாயம் இதனை உணவாக உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க
பசுஞ்சாணத்தில் உரம் தயாரிக்க மத்திய பிரதேச அரசு முடிவு!
ரூ1 கோடி மதிப்பிலான சொத்தை ரிக்ஷா தொழிலாளிக்கு எழுதி வைத்த மூதாட்டி!
Share your comments