வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் முயற்சியில், மெக்சிகன் ராப் பாடகர் ஒருவர் தங்கச் சங்கிலிகளை அறுவை சிகிச்சை மூலம் தலையில் பொருத்தியிருக்கிறார். அவரது இந்த முயற்சி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ரசிகர் கூட்டம் (Fans)
பாடகர்கள் என்றாலே அவர்களின் சிகையலங்காரம் மிகவும் ரசிகர்களைக் கவரும். அவரும் வெளிநாட்டுப் பாடகர்கள் என்றால், அவர்கள் தோற்றம், உடை, சிகையலங்காரம் என அனைத்திலுமே அதிக கவனம் செலுத்துவர். இதற்காகவேத் தனி ரசிகர் கூட்டமும் இருக்கும்.
உதிர்ந்து போனத் தலைமுடி (Fallen hair)
இருப்பினும் உதிர்ந்து போன தலைமுடியைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அது ஒன்றுக்கும் உதவாதது என்பதுதான் உண்மை. எனவே அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்ற பொருளில் உதிர்ந்து போன தலைமுடி பார்க்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை (surgery)
ஆனால், இதற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில், ஒரு வீடியோ இந்த வாதத்தையே புரட்டி போடுகிறது. சற்று வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் முயற்சியில், 23 வயதான மெக்சிகன் ராப் பாடகர் (Mexican Rapper Dan Sur) தங்க சங்கிலிகளை அறுவை சிகிச்சை மூலம் தலையில் பொருத்தியிருக்கிறார்.
அதற்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். ஆனால், தலைமுடியாக தங்க இழைகளை அல்ல, தங்கச் சங்கிலியை பொருத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த ராப் பாடகர், ஏப்ரல் மாதத்தில் வினோதமான அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டார். தங்க முடியைப் பொருத்திக் கொண்ட ராப் பாடகர் இன்ஸ்டாகிராமில் அதை பதிவிட்டார். இதன்மூலம், தலைமுடியையே தங்கச் சங்கிலி பின்னலாக மாற்றிய முதல் மனிதர் இவர் தான்.
தங்க மனிதன் (The golden man)
தலைமுடியை மட்டுமா இவர் தங்கமாக மாற்றியுள்ளார்? பற்களையும் தங்கமாக மாற்றிக் கொண்டார். இவர் தங்கப் பிரியராக இருக்கிறார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், மற்றவர்களைப் போல தனது தலைமுடிக்கு சாயம் பூச விரும்பவில்லை என்றும், வித்தியாசமாக எதாவது செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இது என் முடி, தங்க முடி (This is my hair, golden hair)
உண்மை என்னவென்றால், நான் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினேன், எல்லோரும் தங்கள் தலைமுடிக்கு சாயம் பூசுகிறார்கள். நான் அதை பின்பற்ற விரும்பவில்லை. இப்போது நான் செய்ததை யாரும் நகலெடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இது என் முடி, தங்க முடி. மனித வரலாற்றில் தங்க முடி பொருத்தப்பட்ட முதல் பாடகர் நான்தான் என்கிறார் பெருமிதத்துடன்.
மேலும் படிக்க...
Share your comments