முன்பை விட அதிக வசதிகளுடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய ரயில் (2.0) ஓடுவதற்கு தயாராகியுள்ளது. புதிய வந்தே பாரத் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப் சென்னை) சோதனைக்காக புறப்பட்டது. அம்பாலா ரயில்வே கோட்டத்தின் சண்டிகர்-லூதியானா பிரிவில் அதன் சோதனை நடத்தப்படும். ரிசர்ச் டிசைன் ஸ்டாண்டர்ட் ஆர்கனைசேஷன் குழு இந்தப் பிரிவில் ரயிலின் சோதனையில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது.
வந்தே பாரத் (Vande Bharat)
180 கிமீ வேகத்தில் இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. தற்போது, டெல்லியில் இருந்து கத்ரா மற்றும் டெல்லியில் இருந்து வாரணாசி வரை இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில் முந்தைய வந்தே பாரத் ரயிலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சண்டிகர்-லூதியானா பிரிவுக்குப் பிறகு, கோட்டா (ராஜஸ்தான்) முதல் நாக்டா (மத்தியப் பிரதேசம்) வரையிலான பிரிவில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. 2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் வந்தே பாரத் ரயில் மூலமாக 75 நகரங்களை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை ஒவ்வொரு மாதமும் 6 முதல் 7 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது. தற்போது இந்த அளவை 10 ஆக உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. புதிய வந்தே பாரத் ரயிலில் பயணிகளின் சாய்வு இருக்கையில் புஷ்பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது இருக்கையை முன்னும் பின்னுமாக நகர்த்த அனுமதிக்கும். ரயிலில் பயணிகள் புகைபிடிக்கும் போது அலாரம் ஒலிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசரகாலத்தில் ஓட்டுநருடன் பேசுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு மைக் மற்றும் சுவிட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன.
ரயிலை நிறுத்த புஷ் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. ரயிலின் மின்சார சக்தி செயலிழந்தாலும் மூன்று மணி நேரம் விளக்குகள் எரியும். ரயிலில் திடீரென நெருப்பு ஏற்பட்டால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எளிதாக திறக்க முடியும். இதுபோன்ற நிறைய வசதிகள் வந்தே பாரத் ரயிலில் உள்ளன.
மேலும் படிக்க
ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் கார்: சிறப்பம்சங்கள் இதோ!
ரயில் டிக்கெட் முன்பதிவில் மறுசீரமைப்பு: இனிமே எல்லாமே ஈஸி தான்!
Share your comments