ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையியல் மக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் பணிகளை தோட்டக்கலை துறை, மீண்டும் துவங்கியுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற ஜூன் 30ம் தேதி வரையிலான முழு ஊரடங்கு (Lockdown) மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலங்களில் சில குறிப்பிட்ட அத்தியாவசிய பணிகள் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மளிகைக்கடைகள், பழ விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும். பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதிகளுக்குள்ளேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
காய்கறி பழங்கள் விற்பனை
இந்நிலையில் சென்னையில் உள்ள, 15 மண்டலங்களிலும் நடமாடும் கடைகள் வாயிலாக காய்கறிகள், பழங்கள் விற்பனையை தோட்டக்கலை துறையால் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து, அனைத்து இடங்களிலும் காய்கறிகள், பழங்கள் விற்பனையை தொடங்கியுள்ளனர்.
பொதுமக்கள் வரவேற்பு
தரமான காய்கறிகள், பழங்கள் குறைவான விலையில் விற்கப்படுவதால், அவற்றை வாங்கவும் பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அதிகளவில் விற்பனையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில மண்டலங்களில், காய்கறிகள் பழங்கள் என தனித்தனியாக விற்பனை செய்யப்படுவதால், ஏதேனும் ஒன்றை மட்டுமே பொதுமக்கள் பெற்று வருகின்றனர். அனைத்து மண்டலங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களை விற்பனை செய்வதற்கு தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கவை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!
பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
உங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்!
Share your comments