எதிர் வரும் நான்கு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை அதிகம் பெய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே காற்றின் வேகதிலும், வெப்பநிலையிலும் குறிப்பிடதக்க மாற்றம் இருக்கும் என்பதால் பண்ணைகளில் உள்ள கோழிகளின் தீவனத்தை அதிகரிக்கும் படி பண்ணையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைந்து காணப்படுவதால், தீவன எடுப்பு இனி படிப்படியாக உயரும். அதன் காரணமாக முட்டை உற்பத்தி செலவும் அதிகரிக்கும். எனவே இவற்றை தவிா்க்க, தீவனத்தில் எரிசக்தியின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். மேலும் முட்டை ஓட்டின் தரத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, வைட்டமின் சத்து மிக்க தீவனத்தை பண்ணையாளர்கள் சோ்த்து கொடுக்க வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Share your comments